சென்னை:  அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான  வைத்திலிங்கம் விரைவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று அல்லது நாளை அவர் சேரலாம் என்றும் கூறப்படுகிறது.

அதிமுகவில் எழுந்த மோதல் காரணமாக, அதிமுகவில் இருந்து ஒபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில், அவருடன்  வைத்திலிங்கம் உள்பட சிலர் சென்றனர்.  அவர்களில் முக்கியமானவர், முன்னாள் எம்.பி. வைத்திலிங்கம். ஏற்கனவே ஒபிஎஸ் ஆதரவாளலரான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்துவிட்ட நிலையில், மேலும் பல ஆதரவாளர்கள் மாற்று கட்சிகளை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், வைத்திலிங்கம்  நாளை விஜய்யின் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில்,  அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைந்து, அதிமுகவை பலமிக்க அணியாக மாற்ற வேண்டும் என குரல்  கொடுத்த செங்கோட்டையன்,  அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து,  தவெகவில் இணைந்து, தமிழக அரசியல் களத்தில்  சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  தற்போது டெல்டா ஏரியாவைச்சேர்ந்த வைத்திலிங்கமும் தவெகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 வைத்திலிங்கம் இன்று அல்லது நாளை தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பே வைத்திலிங்கம் தவெகவில் இணையப்போவதாக பேச்சு அடிபட்ட நிலையில்,  அவரை திமுகவில் சேர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனால், அவர் எந்த கட்சியில் சேருவது என்பது குறித்து யோசித்துவந்தார். இதையடுத்து, செங்கோட்டையன் அவரிடம் பேசிய நிலையில், அவர் தவெகவில் இணைய உறுதி அளித்துள்ளதாக  உறுதியான தகவல் கூறுகின்றன.

முன்னாள் அமைச்சரான வைத்திலிங்கம்,  டெல்டா பகுதியில் மிகுந்த செல்வாக்கு பெற்றவர். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய இவர் ஓபிஎஸ் அணியில் இணைந்தார். ஆனால் ஓபிஎஸ் பக்கம் சென்றும் வைத்திலிங்கத்துக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. ஓபிஎஸ் அதிமுக ஒன்றிணைய நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதிய கட்சியும் தொடங்கவில்லை. ஓபிஎஸ் வெத்துவேட்டாக போன நிலையில், எதிர்கால அரசியலை கருத்தில்கொண்டு வைத்திலிங்கம் தவெகவில் இணைய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை  செங்கோட்டையன் செய்ததாக கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]