சேலம்: மேட்டூர் அணை நாளை(ஜனவரி 28) மாலையுடன் மூடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவைகளுக்காக கடந்த 13ம் தேதி மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அன்று முதல் தொடர்ந்து அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.
மேலும், பருவமழை போதிய அளவு பெய்த காரணத்தால், அணை தனது முழு கொள்ளளவையும் எட்டியது. முழு கொள்ளளவான 120 அடியில் இருந்துவந்த நீர்மட்டம், மழை குறைவு மற்றும் நீர்வரத்து நின்றுபோனது உள்ளிட்ட காரணங்களால் கீழிறங்க தொடங்கியது.
அணைக்கு வரும் நீரின் அளவு 518 அடி என்ற அளவில் இருந்து கொண்டுள்ளது. அதேசமயம், பாசனத் தேவையும் குறைந்துவிட்டது. தற்போது அறுவடை காலம். எனவே, அணையை மூடுவதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை(ஜனவரி 28) மாலையுடன், அணை மூடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.