பியாங்யாங்: வடகொரியாவின் சர்வாதிகார அதிபர் கிம் ஜோங் உன், தனது உடன்பிறந்த சகோதரிக்கு முக்கியப் பொறுப்பளித்து, அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடும்ப பாரம்பரிய அடிப்படையில், வடகொரியாவின் சர்வாதிகார அதிபராக தற்போது இருந்து வருபவர் 36 வயதாக கிம் ஜோங் உன். இவரின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரப்பப்டுகின்றன.
இந்நிலையில் கூறப்படுவதாவது; ஆட்சியில், தனது சகோதரி 31 வயதான கிம் யோ ஜாங்க் என்பவருக்கு முக்கிய பொறுப்பு வகிக்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான புதிய கொள்கையை அறிவித்து தனக்குள்ள அதிகாரங்களை கிம் யோ ஜாங்கிற்கு பகிர முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, அதிபரின் உடல்நிலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், அவர் இல்லாத நிலையில், அவருடைய சகோதரி, கிம் யோ ஜாங்க் ஆட்சியை நிர்வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.