புதுடெல்லி: இங்கிலாந்துடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் விளையாடும் இந்திய அணிக்கு, இந்தாண்டின் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வெறும் 4 நாட்கள் மட்டுமே ஓய்வு கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தாண்டின்(2021) ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9ம் தேதி தொடங்கவுள்ளது. அதேசமயம், இந்திய அணி, தற்போது இங்கிலாந்துக்கு எதிரான நீண்ட தொடரில் விளையாடி வருகிறது.
தற்போது டி-20 தொடர் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. அத்தொடர் மார்ச் 28ம் தேதி முடிகிறது.
அதன்பிறகு, இந்திய வீரர்கள் உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் செல்ல வேண்டும். மேலும், அவர்கள் 50 நாட்கள் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, தங்களின் இல்லங்களுக்கும் சென்று திரும்ப வேண்டும்.
எனவே, ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, இந்திய வீரர்களுக்கு அதிகபட்சமாக 4 நாட்கள் வரை மட்டுமே ஓய்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.