இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறுகிறது. இதன் காரணமாக, இம்ரான்கான் அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் மீது எதிர்க்கட்சியினர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுங்ககளை சுமத்தி வருகின்றனர். இதையடுத்து அவரது அரசு மீது நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சலசலப்புக்கு இடையில் இன்று பாகிஸ்தானில் நாடாளுமன்றம் கூடுகிறது. இன்றைய அமர்வில், இம்ரான்கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடைபெறவுள்ளது. பெரும்பான்மையை இழந்துள்ளதால் இம்ரான்கான் அரசு கவிழும் நிலை உருவாகியுள்ளது.
ரஷ்யா – யுக்ரேன் போர், உலக பொருளாதா பாதிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளால் பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது. மேலும், எதிர்க்கட்சிகளும் இம்ரான்கான் மீது பெரும் எதிர்பார்ப்புகள் வைத்திருந்தோம். ஆனால், அவர் எங்களை ஏமாற்றி விட்டார் என்றும், ஆட்சிக்கு வருவதற்கு முன் ஏழைகளுடன் இருப்பதாக கூறினார். ஆனால், எதுவும் செய்யவில்லை, மக்களின் வாழ்க்கை மிகவும் கடினமாகிவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளன.
இதையடுத்து, இம்ரான்கானுக்கு எதிராக, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி தலைமையில் எதிர்க்கட்சியினர் கூட்டம் நடத்தினர். தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் குழுக்களிடையே நடத்தப்பட்ட பல்வேறு சந்திப்புகளைத் தொடர்ந்து, இம்ரான் கானை பிரதமர் பதவியில் இருந்து நீக்க நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக அறிவித்தன.
தொடர்ந்து, இம்ரான்கான் அரசை பதவி விலகச்செய்ய நெருக்குதல் அளிக்கும் பொருட்டு எதிர்க்கட்சிகள் , மார்ச் 23 ஆம் தேதி “விலையேற்றத்திற்கு எதிரான அணிவகுப்பு” ஒன்றைம் நடத்தின. அதைத்தொடர்ந்து, பிரதமர் இம்ரான் கானின் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முக்கிய எதிர்க்கட்சிகள் தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்துள்ளன.
இந்த பரபரப்பான சூழலில் இன்று பாராளுமன்றம் கூடுகிறது. இன்றைய அமர்வில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பரபரப்பான விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு தனிப்பெரும்பான்மை மட்டுமே தேவை. நாடாளுமன்றத்தில் 342 உறுப்பினர்கள் உள்ளனர், அதாவது 172 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால், இம்ரான் கான் பதவி விலக வேண்டும். ஆனால், ஆளும் இம்ரான்கான் கட்சியான பிடிஐக்கு, 155 இடங்கள் உள்ளன. மேலும், அது தன் கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் அரசை நடத்துகிறது. அவர்களில் பெரும்பாலான வர்கள் நாட்டின் பாதுகாப்பு அமைப்புக்கு நெருக்கமானவர்கள். அவர்களை, தங்களது பக்கம் இழுக்க எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன.
இதனால், அங்கு நிலவிம் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் கூட்டணி கட்சிகள் கிங் மேக்கர்களாக உள்ளனர். இம்ரான்கான் தலை தப்புவதும், உருளுவதும் கூட்டணி கட்சிகளிடையே உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் தகவல்துறை அமைச்சர் ஃபவாத் செளத்ரி, இம்ரான் கானின் அரசை அகற்ற எதிர்க்கட்சிகள் முயற்சிப்பது இது பதின்மூன்றாவது தடவை/ அவர்களின் அச்சுறுத்தல்காளல் நாங்கள் பயப்படப்போவது இல்லை. எதிர்க்கட்சிகளிடம் பிரதமர் பதவிக்கு ஒரு கூட்டு வேட்பாளர்கூட இல்லை. ஒருமித்த கருத்து கூட இல்லை, அவர்கள் மக்களை முட்டாளாக்குகிறார்கள்” என்று கடுமையாக சாடினார்.
முன்னதாக, பாகிஸ்தான், பிரதமர் இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்வைக்கும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையின் பேரில் நாடாளுமன்ற சபாநாயகர் மார்ச் 25 அன்று நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இதற்கென நிர்ணயிக்கப்பட்ட 14 நாட்கள் உச்சவரம்பை தாண்டி இந்த நாள் வருவதால், இந்த முடிவு அரசியலமைப்புக்கு முரணானது என்று எதிர்க்கட்சிகள் கூறின. இந்த விவகாரத்தை எதிர்கட்சியினர் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளர். அதே வேளையில், இம்ரான்கானும், நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் கருத்து கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.