திருவனந்தபுரம்: கேரள மாநில அரசியல் வரலாற்றில் இந்த சட்டசபை தேர்தல் புதிய மாற்றத்தை உருவாக்கும் என்று மத்திய அமைச்சர் வி. முரளிதரன் தெரிவித்தார்.

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகின்றது. இந் நிலையில், மத்திய அமைச்சர் முரளிதரன் கேரளத்தில் உள்ள கொட்டாரம் வாக்குச்சாவடியில், தனது வாக்கை பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்த தேர்தல் கேரள அரசியல் வரலாற்றில் ஒரு புதிய மாற்றத்தை உருவாக்கப் போகிறது. மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள். இடது மற்றும் வலது ஜனநாயக முன்னணி கூட்டணிகளை மக்கள் இம்முறை நிராகரிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
[youtube-feed feed=1]