துபாய்: தற்போதைய நிலையில், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் தோனியின் சென்னை அணி, ஐதரபாத்தை இன்று எதிர்கொள்கிறது.
இந்தப் போட்டியிலிருந்து தோனியின் அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மோசமான ஃபார்மில் இருக்கும் முரளி விஜய் அணியில் இடம்பெறமாட்டார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தனது முதல் போட்டியில் மும்பை அணியை வென்ற சென்ன‍ை அணி, அடுத்தடுத்த 2 போட்டிகளில் தோற்றது. இந்நிலையில், காயத்தால் அவதிப்பட்ட அம்பதி ராயுடு மற்றும் டுவைன் பிராவோ போன்றோர் இன்றையப் போட்டியில் இடம்பெறுவதாக கூறப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் உள்ளே நுழைந்தால், முரளி விஜய் மற்றும் ஹேசல்வுட் ஆகியோர் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து 2 போட்டிகளில் சென்னை அணி தோல்வியடைந்த நிலையில், தோனியின் மீது கடுமையான விமர்சனங்கள் இருந்தன. எனவே, சூழலுக்கேற்ற பொருத்தமான & விவேகமான முடிவுகளை எடுக்க வேண்டிய கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.