மே.வங்க முதல்-அமைச்சரும், திரினாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, இப்போது கொல்கத்தாவில் உள்ள பவானிபூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

இந்த நிலையில் இன்னும் மூன்று மாதங்களில் அந்த மாநிலத்தில் நடைபெற உள்ள தேர்தலில் பவானிபூர் தொகுதி தவிர நந்திகிராம் தொகுதியிலும் போட்டியிடப் போவதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

நந்திகிராமில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசும் போது மம்தா பானர்ஜி இதனை தெரிவித்தார்.

கடந்த தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் திரினாமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுவேந்து அதிகாரி அண்மையில் பா.ஜ.க.வில் சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில் மம்தாவுக்கு சவால் விடுத்து சுவேந்து அதிகாரி கருத்து தெரிவித்துள்ளார்.

“நந்திகிராமில் மம்தாவை எதிர்த்து போட்டியிட பா.ஜ.க. எனக்கு வாய்ப்பு அளித்தால் அவரை, 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன்” என தெரிவித்துள்ள சுவேந்து அதிகாரி “இல்லை என்றால் நான் அரசியலை விட்டு விலகத்தயார்” என ஆவேசமாக கூறினார்.

– பா. பாரதி