ந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வீரியமாகி வரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 28 நாட்கள் நீடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தலைநகரில் இருந்து உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்தியாவில் கடந்த வாரம் வரை கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற தப்லிகியின் நிஜாமுதீன் மார்க்காஸ் மாநாட்டில் கலந்துகொண்ட இஸ்லாமியர்கள் ஏராளமானோரிடம் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமாகவும், வீரியமாகவும் பரவி வருகிறது.

மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், ஏராளமானோரை தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் ஏற்கனேவ கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக 21 நாட்கள்  அமல்படுத்தப்பட்ட ஊரங்கு இன்னும் ஒரு வாரத்தில் முடிவுக்கு வரும் தருணத்தில், தற்போது அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, ஊரடங்கை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.

பிரதமர் மோடி கடந்த சில நாட்களாக மாநில அமைச்ச்ரகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், ஆயுஷ் மருத்துவர்களிடம் தொடர்ந்து  ஆலாசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையின்போது, நோய் தடுப்பு குறித்தும், ஊரடங்கு நீட்டிப்பது குறித்தும் விவாதித்தாக கூறப்படுகிறது. அப்போது அனைத்து தரப்பினரும் அரசுக்கு ஒத்துழைப்பு நல் வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருந்தாலும்,  வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, ஊரடங்கை மேலும் நீட்டிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், மத்திய அரசோ, இது குறித்து தெளிவான அறிவிப்பு வெளியிடாத நிலையில், ரெயில் மற்றும் விமானப் போக்குவரத்துக்கு முன்பதிவு தொடங்கி உள்ளதால், ஊரடங்கு நீட்டிக்கப்படாது என்று சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இருந்தாலும், இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,000-ஐ தாண்டியுள்ளது, அதுபோல பலி எண்ணிக்கையும் 110 ஆக உயர்ந்துள்ளது.  அத்துடன் நாடு முழுவதும் 274 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருப்பதாகவும் மத்தியஅரசு தெரிவித்துஉள்ளது.

இந்த நிலையில், கொரோனா பாதித்த நாடு முழுவதும் உள்ள 274 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுபோன்ற சூழலில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் மட்டும் ஊரடங்கை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கலாமா? அல்லது கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 274 மாவட்டங்களை மட்டும் தனிமைப்படுத்தலாமா என்பது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இன்று நடைபெற்ற மத்தி யஅமைச்சரவை கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டதாகவும், மேலும் சில நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டித்தால், கொரோனா பரவலை முழுமையாக தடுக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், நாடு முழுவதும் மேலும் சில நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படும் வாய்ப்புகளே பிரகாசமாக உள்ளதாக தகவல்கள் பதவி வருகின்றன…