2025 ஏப்ரல் மாதம் முதல் அனைத்து வங்கிகளும் இனி வாரம் 5 நாட்கள் மட்டுமே செயல்படும் என்றும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்படும் என்ற செய்தி பரவிவருகிறது.
வாரம் 5 நாள் பணி குறித்து வங்கி ஊழியர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் இது தொடர்பாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா எந்த ஒரு முடிவையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
மேலும், ஏற்கனவே மாதம் இரண்டு சனிக்கிழமை (இரண்டாவது மற்றும் நான்காவது) விடுமுறை வழங்கப்படும் நிலையில் திங்கள் மற்றும் அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமைகளில் கூடுதல் பணிச் சுமை இருப்பதாகக் கூறப்படுகிறது.
தவிர, இதனை ஈடுசெய்ய இரண்டு ஷிப்டுகளில் வங்கி சேவை வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வாரம் 5 நாள் மட்டுமே வங்கிகள் செயல்படும் என்று கூறப்படுவது உண்மையில்லை என்றும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றும் தெரிகிறது.