சென்னை: 2024 பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். அடுபோல 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவரது திடீர் அறிவிப்பு, கடந்த 2016ம் ஆண்டு அவர் கூறிய, மீண்டும் மாற்றம், முன்னேற்றம், அன்புமணியா என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், மாற்றம்… முன்னேற்றம்… அன்புமணி என ஊரையே கலக்கி போஸ்டர் ஒட்டி வாக்கு வேட்டையாடிய நிலையில், பல இடங்களில் டெபாசிட் பறிபோனதுடன், அன்புமணியே தோல்வி அடைந்தை மறந்துவிட்டார்போலும் என அரசியல் விமர்சகர்கள் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பாமக 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், அதிமுக மீண்டும் இரண்டாக பிரிந்துள்ள நிலையில், தற்போது பாமகவின் நடவடிக்கை திமுகவுக்கு சாதகமாகவே இருந்து வருகிறது. இந்த சூழலில்தான் கடந்த மே மாதம் (2022) பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பல்வேறு போராட்டங்களை அறிவித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்ட பாமக நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பிறகு நேற்று செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, 55 ஆண்டு காலம் இரு திராவிட கட்சிகளும் ஆட்சி செய்தது போதும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டனர். வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் தமிழகத்தில் உறுதியாக ஆட்சி அமைப்போம் என்று கூறினார். அதன்படி திருவள்ளூரில் நடத்திய ஆலோசனையில் இந்த முடிவு எடுக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாம தலைவர், அன்புமணி ராமதாஸ், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையிலான ஆட்சி அமைப்போம் என்றும் அதற்கான வியூகங்களை 2024-ல் வகுப்போம் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பாற்றாளுமன்ற தேர்தலில் அதிமுகவை கழட்டிவிட்டுள்ள பாமக திமுக கூட்டணியில் இணையுமா? அல்லது தனித்து களமிறங்குமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது. ஆனால், 2024 சட்ட மன்ற தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை என்பதை சுட்டிக்காட்டி இருப்பதுடன், பாமக தலையில் ஆட்சி அமையும் என்று அன்புமணி தெரிவித்திருப்பது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில், பாமக திமுக தலைமையை ஏற்குமா அல்லது பாஜக தலைமையா ஏற்குமா அல்லது தனித்தே போட்டியிட்டு தனது பலம் என்ன என்பதை சுய பரிசோதனை செய்துகொள்ளுமா என்பது போகபோகத்தான் தெரிய வரும். தேர்தல் காலத்தில், தனது நிலைப்பாட்டினை மாற்றுவது பாமகவின் வாடிக்கை என்பது அனைவரும் அறிந்தேதே.
அதுபோல, தற்போதைய அன்புமணியின் பேச்சும், பேட்டியும், அவர் கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது கூறிய, மாற்றம் முன்னேற்றம், அன்புமணி என்பதை நினைவுபடுத்தும் வகையில், ஏமாற்றமே பாமகவுக்கு இருக்கும் என விமர்சனங்கள் சமுக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது, ‘மாற்றம்… முன்னேற்றம்… அன்புமணி’ என்ற வசனமும், அன்புமணி மேல அன்னார்ந்திருப்பது போன்ற புகைப்படமும் தாங்கிய போஸ்டர் பட்டிதொட்டி முழுவதும ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தேர்தல் முடிவோ மாற்றத்தை தேடிய அன்புமணிக்கு ஏமாற்றத்தையோ கொடுத்தது. பா.ம.க ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை என்பது சாதாரண ஏமாற்றம் இல்லை மெகா ஏமாற்றம். வன்னியர்கள் பெல்டாக இருக்கும், தருமபுர பெண்ணாகரம் தொகுதியில் போட்டியிட்ட அன்புமணியே 18,446 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தது பாமகவுக்கு பெருத்த அடியாக அமைந்தது.
மக்களிடம் மாற்றத்தை கொண்டுவருவோம் என புருடாக்கள் விட்டாலும், அவர்களின் பச்சோந்தித்தனமான அரசியல் நாடகம் பொதுமக்களிடம் எடுபடவில்லை என்பது வெட்ட வெளிச்சமானது. இந்த நிலையில், தற்போதும், மீண்டும் புருடாவிட ஆரம்பிள்ளார் அன்புமணி. தங்கள் கட்சி தலைமையில்தான் ஆட்சி அமைப்போம் என்று கூறி வருகிறார். அவர் நோக்கம் முழுக்க முதல்வர் பதவியை பிடிப்பதிலேயே குறியாக இருப்பது மீண்டும் வெளிப்பட்டு உள்ளது. அவரது ஆசை நிறைவேறுமா? அல்லது, மீண்டும் சம்மடடி அடி பாமகவுக்கு கிடைக்குமா என்பது, அடுத்த வர இருக்கும் தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு புரிய வைக்கும்… பொறுத்திருப்போம்…