டெல்லி:

விக்கிபீடியா நிறுவனம் சார்பில் இணையதள செய்தி நிறுவனம் தொடங்கப்படுகிறது.

இது குறித்து விக்கிபீடியா நிறுவன அதிபர் ஜிம்மி வேல்ஸ் கூறுகையில்,‘‘இணையதளத்தில் செய்திக்கு என பிரத்யேக வலைதளம் தொடங்கப்படுகிறது. இதன் மூலம் பத்திரிக்கையாளர்களை ஒன்றிணைக்கப்படுவார்கள். இதற்கு விக்கிடிரிபியூன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இவர்களை கொண்டு போலி செய்திகள் இணையதளத்தில் பரவுவது தடுக்கப்படும். போலி செய்திகளுக்கு எதிராக போராடுவது தான் வக்கிபீடியாவின் நோக்கம்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘உண்மை செய்திகளை மட்டும் மக்கள் வாசிப்பதை உறுதிபடுத்தப்படும். அ ந்த செய்தி உள்ளூரிலும், உலகளவிலும் தாக்கத்தை ஏற்படுத்த கூடியதாக இருக்கும்’’ என்றார்.

மேலும், அந்த இணையதளத்தில் ‘‘தொழில்முறை இதழியலாளர்களின் கட்டுரைகள் இதில் வெளியாகும். இன்டர்நெட் பயன்படுத்துவோர் இந்த கட்டுரையில் திருத்தம் செய்வது, கூடுதலாக சேர்ப்பது போன்ற கருத்துக்களை தெரிவிக்கலாம். இந்த திருத்தங்களை தன்னார்வ பரிசோதகர்கள் மேற்கொள்வார்கள். பேட்டிகளின் முழு பகுதியும் வீடியோ மற்றும் ஆடியோவுடன் வெளியிடப்படும்.

செய்திக்கான ஆதாரங்கள் வெளிப்படைதன்மை கொண்டதாக இருக்கும். உண்மை மற்றும் நடுநிலை என்ற தாரக மந்திரத்துடன் செயல்படும்’’ என்று அந்த வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரம் அல்லது சந்தா மூலம் நிதி திரட்டப்படுவதில்லை. ஆதரவாளர்கள் நிதியுதவிடயுடன் இது செயல்படும். சமூக வளைதளங்களில் வெளியாகும் போலி செய்திகள் தடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.