லண்டன்
விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சோவுக்கு ஈக்வடார் நாடு குடியுரிமை வழங்கி உள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் ஜூலியன் அசாஞ்சே. இவர் விக்கிலீக்ஸ் என்னும் இணைய தளத்தை நிறுவி உள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தின் ரகசியக் கோப்புகளை அசாஞ்சே வெளியிட்டார். அதனால் உலக அளவில் கடும் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்க அரசு இவரைக் கைது செய்ய முயன்றதால் இவர் அங்கிருந்து வெளியேறினார்.
இது குறித்து அமெரிக்காவின் மத்திய உளவு அமைப்பின் தலைவர், “அசாஞ்சே அமெரிக்காவைப் பற்றியும் அமெரிக்காவின் கொள்கைகள் பற்றியும் ஒன்றுமே தெரியாதவர். அவர் எப்போதும் அமெரிக்காவின் எதிரி நாடுகளுக்கு ஆதரவாகவே செயல்படுகிறார். பயங்கரவாதிகளை ஆதரிக்கிறார்” என குறிப்பிட்டார்.
அசாஞ்சே மீது இரு ஸ்பெயின் பெண்களை பலாத்காரம் செய்ததாக குற்றம் உள்ளது. அதை ஒட்டி லண்டன் நகரில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ள அசாஞ்சேவுக்கு அந்த நாடு அவருக்கு நிரந்தர குடியுரிமையை வழங்க உள்ளது. இந்த தகவலை ஈக்வடார் நாட்டின் வெளியுறவுத் துறை அமச்சர் மரியா ஃபெர்னாண்டா தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அசாஞ்சே ஈக்வடார் நாட்டின் சின்னம் பொறித்த உடையை அணிந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.