கான்பெர்ரா

விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சே 14 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவ்க்கு திரும்பி வந்துள்ளார்.

.

கடந்த 2010 ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ் எனும் ஊடகத்தை நடத்தி வரும் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதல் வீடியோவை வெளியிட்டார்.  இதில் ராய்ட்டர்ஸ் ஊடகவியலாளர் 2 பேர் உட்பட 12 பேர் படுகொலை செய்யப்பட்டது, பல ராணுவ ரகசியங்கள் ஆகியவை வெளியானது

அமெரிக்கா ஜூலியன் அசாஞ்சேவை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்து அவரை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது  பிரிட்டிஷ் காவல்துறையினர், ஜூலியன் அசாஞ்சேவை கைது செய்து கடந்த 5 ஆண்டுகளாக தெற்கு லண்டனில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார்.

நீதிபதி டேமி விக்டோரியா ஷார்ப்  “ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று அந்த நாட்டு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.  அவரது கருத்து சுதந்திரத்துக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

அமெரிக்காவின் பசிபிக் தீவுகள் பிராந்தியமான சைபன் நீதிமன்றத்தில் அசாஞ்சே ஆஜரான நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை 3 மணி நேரமாக நடந்து விசாரணையின் இறுதியில் அசாஞ்சே குற்றவாளிதான் என்று தீர்ப்பளித்த நீதிபதி ரமானோ ஏற்கனவே லண்டன் சிறையில் தண்டனைக் காலத்தை அனுபவித்ததால் அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.

எனவே சுதந்திர மனிதனாக நீதிமன்றத்தில் இருந்து ஜூலியன் அசாஞ்சே வெளியில் வந்தார்.  கடந்த 14 வருடங்களாக தாய் நாடான ஆஸ்திரேலியாவை விட்டு பிரிந்து இன்னல்களுக்கு ஆளான 52 வயதாகும் ஜூலியன் அசாஞ்சே,  அமெரிக்காவின் சைபனிலிருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று ஆஸ்திரேலியா சென்றடைந்தார்.