அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தலைவர் இல்லாத நிலையில், சோனியாவே இடைக்கால தலைவராக நீடித்து வருகிறார். இதையடுத்து, 5 மாநில முன்னாள் முதல்வர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் உள்பட 23 பேர் இணைந்து, காங்கிரஸ் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதினர். அதில், கட்சியைப் பலப்படுத்த அனைத்து அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக சோனியா காந்தி காரிய கமிட்டி கூட்டத்தில் அறிவித்தார். இந்த விவகாரம் குறித்து ராகுல்காந்தி பேசிய கருத்து, மூத்த தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கடிதம் எழுதியது ஏன் என்று, அதில் கையெழுத்திட்ட மூத்த தலைவர்களில் ஒருவரான கபில்சிபல் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், ‘இது ஒரு பதவியை பற்றியது அல்ல. மாறாக எனது நாட்டை பற்றியது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
கபில்சிபல் சூசகமாக இந்த டிவிட் பதிவிட்டு இருப்பது மீண்டும் சலசலபை ஏற்படுத்தி உள்ளது.