சென்னை:
தமிழக சட்டமன்றத்தில் திறக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை அகற்ற கோரியும், ஓ.பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இரு வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதில், சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தீர்ப்பு குறித்து திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கூறுகையில், ‘‘மக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் திமுக.வின் சட்ட போராட்டம் தொடரும். சபாநாயகருக்கு அறிவுறுத்த முடியாது எனில் இத்தனை காலம் வழக்கை விசாரித்தது ஏன்?. தீர்ப்பை தள்ளிப்போட்டது ஏன்? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்
Patrikai.com official YouTube Channel