மதுரை:  மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவுநாளில் கோயில்களில் சிறப்பு அன்னதானம்   வழங்குவது ஏன் என தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை  உத்தரவிட்டுள்ளது.

கடவுள் மறுப்பாளரான  அண்ணாதுரை  பெயரில்  இந்து கோவில்களில் அன்னதானம் வழங்குவது ஏன் என மனுதாரர் தரப்பு கேள்வி எழுப்புகிறது. ஒருவர் பெயரில் அன்னதானம் வழங்க எத்தகைய விதிமுறைகள் உள்ளன என்பது குறித்து அறநிலையத்துறை தெளிவுபடுத்த வேண்டும்,’ என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியது.

தமிழக முதல்வராக இருந்த அண்ணாதுரையின் நினைவு நாளையொட்டி, கோயில்களில் சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது. அவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவராக கருதப்படுகிறார் . அப்படி இருக்கும்போது,  அவரது நினைவு நாளில்  இந்து கோவில்களில் அன்னதானம் வழங்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை  விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,  இதை எதிர்த்து,   அம்பாசமுத்திரம் மன்னார்கோவில் ராஜகோபால சுவாமி குலசேகர ஆழ்வார் கோயில் அர்ச்சகர் பெரியநம்பி நரசிம்ம கோபாலன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில்,  கடவுள் நம்பிக்கை இல்லாத அண்ணாதுறை து நினைவு நாளில்  இந்து கோவில்களில் அன்னதானம் வழங்க  தடை விதிக்க வேண்டும் என்றும்,  அவர் எழுதிய ‘ஆரியமாயை’ புத்தகத்தில்,’ நாலு தலைச் சாமிகள், ஆயிரம் கண்சாமி, காளை ஏறும் கடவுள், காக்காய் மீது பறக்கும் கடவுள் என புராண அட்டவணைகளிலே உள்ளனவே!

நாம் ஹிந்து என கூறிக்கொண்டால், இவர்களை நமது தெய்வங்கள் என ஒப்புக்கொண்டு தொழ வேண்டுமே. இச்செய்தியைக் கேட்டால் உலக நாகரிக மக்கள் நம்மை நீக்ரோக்களைவிட கேவலமானவர்கள் என கேலி செய்வார்களே!

இத்தகைய ஆபாசத்தை நம் தலையில் துாக்கிப் போட்டுக் கொள்ள நமக்கு மனம் எப்படித் துணியும்.. ஆகவே நாம் ஹிந்து அல்லவென்று கூறுகிறோம்,’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதுபோல, அவரத ‘தீ பரவட்டும்’ புத்தகத்தில்,’கம்பராமாயணம், பெரியபுராணம் ஒழிக்கப்பட வேண்டும். இவை கற்பனைக் கதைகள். ஆரிய மார்க்கத்தைப் புகுத்தும் கருவிகள். ஆரியர்களை மேன்மைப்படுத்த, தமிழரை இழிவுபடுத்த, அடிமைப்படுத்த அவை பயன்படுகின்றன. தமிழரின் வாழ்வு, நெறி, அரசு, மானமும் கெடுவதால், அவைகளை ஒழிப்போம். தீயிலிடுவோம்,’ என அண்ணாதுரை எழுதியுள்ளார்.

இவ்வாறு இந்துக்கள் குறித்தும், இந்து மதம் குறித்து விமர்சித்துள்ள கடவுள் மறுப்பாளரான அண்ணாதுரை நினைவு நாளில், ஏன் கோவில்களில் அன்னதானம் வழங்க வேண்டும் என கேள்வி எழுப்பியதுடன், அதற்கு தடை விதிக்க வேண்டும்.

அண்ணாதுரை நினைவுநாளில் ஹிந்து கோயில்களில், கோயில் நிதியிலிருந்து சிறப்பு அன்னதானம் மற்றும் இலவச வேட்டி , சேலை வழங்குவதை நிறுத்தக்கோரி அறநிலையத்துறை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். அதற்கு பதில் இல்லை. அதனால், இந்த விஷயத்தில் நிதிமன்றம்  நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை,  ‘கடவுள் மறுப்பாளரான அவரது பெயரில் அன்னதானம் வழங்குவது ஏன் என மனுதாரர் தரப்பு கேள்வி எழுப்பபி இருக்கறிர்.   ஒருவர் பெயரில் அன்னதானம் வழங்க எத்தகைய விதிமுறைகள் உள்ளன என்பது குறித்து அறநிலையத்துறை தெளிவுபடுத்த வேண்டும்,’ என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.