பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரணம் தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, போதைப்பொருள் கும்பலுடன் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்திக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நடிகை ரியா, அவரது தம்பி ஷோவிக், சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர், வேலைக் காரர் மற்றும் போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்கள் என 12-க்கும் மேற்பட்டவர்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கைதான ரியா உள்ளிட்டோர் கொடுத்த தகவலின் பேரில் பிரபல நடிகைகள் ரகுல் பிரீத் சிங், சாரா அலி கான், தீபிகா படுகோன், ஷிரத்தா கபூர் ஆகிய 4 பேருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் (என்சிபி) நேற்று சம்மன் அனுப்பியுள்ளனர். 4 பேரையும் வரும் 26-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சம்மனில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கங்கணாவுக்கு ஏன் என்சிபி சம்மன் அனுப்பவில்லை என்று நடிகையும் காங்கிரஸ் பிரமுகருமான நக்மா கேள்வியெழுப்பியுள்ளார்.
Why has the NCB not summoned Kangana Ranaut who has admitted to have taken drugs . If they could summon other actresses on basis of what’s app chat ?? Hypocrite and is this the duty of NCB to leak out information to Press and malign the image of only female top actresses 56 inch pic.twitter.com/REWJLIYHNB
— Nagma (@nagma_morarji) September 23, 2020
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் வெளியிட்ட ஒரு வீடியோவில் தான் திரைக்கு வந்த புதிதில் போதைப் பொருட்களை பயன்படுத்தியதாக கங்கணா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .