2014 பாராளுமன்றத்  தேர்தலில் வெற்றிப்பெற்று நரேந்திர மோடி அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு தலித்துகள் தொடர்ந்து தாக்கப்படுவதும்,  கொல்லப்படுவதும் அன்றாட நிகழ்வாகி வருகின்றது. குறிப்பாக பசுவின் பெயரில் தலித்துகளும், முஸ்லிம்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

பசு பாதுகாவலர்களால் தொடர்ந்து தலித்துகள்மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றது.

குஜராத்தில் மாட்டிறைச்சி அரசியல் உச்சத்துக்கு வந்துள்ளது. பசு பாதுகாப்பு இயக்கத்தினர்  தலித் மக்கள் மீது தாக்குதல் தொடர்கிறது. தலித் மக்களும் பசு புனிதமானது என்றால்  இறந்தாலும்  நீங்களே அடக்கம் செய்யுங்கள் என பதிலடி கொடுத்துள்ளனர்.
பிரதமர் இதுகுறித்து கருத்து தெரிவிக்காமலும் நடவடிக்கை எடுக்காமலும் உள்ளது பசுவின் பெயரில் தலித்துக்கள் மீது வன்முறை நடத்த ஆர்.எஸ்.எஸ்  உள்ளிட்ட இந்து அமைப்பினருக்கு தைரியத்தை கொடுத்துள்ளது.

ramdas-athawale-b17
இதனைக் கண்டு கொதித்தெழுந்துள்ளார் ஒரு மத்திய இணை அமைச்சர்.
இந்தியக் குடியரசுக் கட்சி (அத்தாவலே) யின் தலைவரான 56 வயது ராம்தாஸ் அத்தாவலே, ஒரு மாநிலங்களவை உறுப்பினர். தலித் தலைவராக இருந்து சமீபத்தில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ஆனவர் ராம்தாஸ் அத்தாவலே. மகாராஸ்திராவைச் சேர்ந்த ராம்தாஸ் அத்தாவலே புத்த மதத்திற்கு மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விசயத்தில் நேரேந்திர மோடி தலையிட்டு தாழ்த்தப்பட்டோர் நலனுக்காகச் சட்டங்கள் மற்றும் முயற்சிகள் செயல்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு அளித்துள்ள ஒரு பேட்டியில், ஒரு விலங்கினைப் புனிதமாகக் கருதும், பசுவினை பாதுகாக்கும் கண்காணிப்பாளர்களால் தலித்துகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது குறித்து அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்துள்ளார் ராம்தாஸ் அத்தாவலே.

கீழ்த்தரமான செயலுக்கு ஆதரவான அரசியல்வாதிகள்மீது தமக்கு நம்பிக்கை இல்லையெனத் தெரிவித்துள்ளார் ராம்தாஸ் அத்தாவலே. அவர் தலித்துகள்மீது தாக்குதல் நடத்துபவர்களைசந்தர்ப்பவாதிகள் மற்றும் நேர்மையற்றவர்கள் என்று விமர்சித்துள்ளார்.
குஜராத் கிராமத்தில் ஜூலை 11ல் தலித்துகள்மீது நடத்தப்பட்ட  தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் ராம்தாஸ்.

“தேசிய ஜனநாயகக் கூட்டணி” நிர்வாகத்தை வழிநடத்தும் பா.ஜ.க. பாரதிய ஜனதாக் கட்சி, இனி  “பிராமணர்/ பனியா கட்சி” யாக இருக்கமுடியாது”

பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் தலித்துகளுக்கு எதிரானவர் இல்லை”

“பா.ஜ.க. தலித்துகளை அச்சுறுத்தவில்லை” என்று தெரிவித்தார்.

“கவ் ரக்சக்” எனும் மாடு பாதுகாவலர்களிடம் ” “ஏன் நீங்கள் மனிதர்களைக்  கொல்லுகின்றீர்கள்?   என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில், முஸ்லீம் பெண்கள்மீது தாக்குதல் நடத்திய பசுப் பாதுகாவலர்கள், இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடாமல், மாடு பாதுகாப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.
முன்னாள் உத்தர பிரதேச முதல்வர் மாயாவதிக்கு எதிராகப் பா.ஜ.க. கட்சியின் மூத்த தலைவர் அருவறுப்பான கருத்தைக் கூறியதால் “பி.ஜே.பி இப்போது மிக வலுவான சக்தியாக உத்தரப் பிரதேசத்தில் மாறிவிட்டது என்றார்.

mayavathi

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி  ஒரு உண்மையான அம்பேத்கரியவாதி கிடையாது. அதனால் தான் மாயவதி புத்தமதத்தை ஏற்கவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய சமூக சீர்திருத்தவாதி பாபாசாகேப் அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்கின்றார் மாயாவதி என்றும் தெரிவித்துள்ளார் ராம்தாஸ் அத்தாவலே.
மோடி அரசு, தமது பட்ஜெட்டில் 15 சதவிகிதத்தை  எஸ்.சி. மேம்பாட்டு திட்டங்களுக்கு அவசியம் ஒதுக்க வேண்டும். அரசு பணிகளில் பதவி உயர்வுக்கும்  இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட   வேண்டும்  என்றார்.
மேலும், ஜாட், பட்டேல், தாக்கூர் மற்றும் மராட்டியர்கள் இட ஒதுக்கீடு கோரி போராட்டங்களில் ஈடுபடுவது குறித்த கேள்விக்கு, “அரசு கிரீமிலேயர் அடிப்படையில் பொருளாதாரத்தில் முன்னேறிய மக்களுக்கு இடஒதுக்கீட்டு பயன் மறுக்கப்பட வேண்டும், என்றும் அவர் கூறினார்.