மே- 3 வரை ஊரடங்கு…என்னதான் கணக்கு ?
கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாள் ஊரடங்கு ,கடந்த மாதம் 25 ஆம் தேதி அமல் படுத்தப்பட்டது.
நேற்றுடன் இந்த ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது.
ஊரடங்கு முடியும் தறுவாயில், தமிழகம், ஒடிசா, பஞ்சாப்,தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இந்த மாதம் 30 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தன.
இந்த நிலையில், நேற்று தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, ‘’ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும்’’ என்று அறிவித்தார்.
மாநிலங்கள் ஏப்ரல் 30 வரை என்று அறிவித்துள்ள நிலையில், மே 3 ஆம் தேதி வரை என மோடி அறிவிக்க என்ன காரணம்?
ஜோதிடம், வாஸ்து சமாச்சாரங்கள் எதுவும் இல்லை.
சாதாரணமான ‘மேட்டர்’ தான்.
மே ஒன்று- தொழிலாளர் தினம்.
அரசாங்க விடுமுறை.
இரண்டாம் தேதி சனிக்கிழமையும், 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும், வழக்கமான அரசு விடுமுறை.
எனவே தான், மே, 3 வரை என்ற அறிவிப்பு.
– ஏழுமலை வெங்கடேசன்