நெட்டிசன்:

மூத்த ஊடகவியலாளர் விஷ்வா விஸ்வநாத் அவர்களது முகநூல் பதிவு:

மிழர்களின் தோன்றல், வளமான வாழ்வு, மொழித்திறன், பண்பாடு, சுய சார்புத் தன்மை ஆகியவற்றின் வேர்கள் பதினைந்தாயிரம் ஆண்டுகளை சாதாரணமாகத் தொடுகின்றன. ஆனால் 1923 ல்தான் வீரசாவர்க்கர் என்ற ஒருவர் இந்து மதம் சார்ந்த அரசியலுக்கு விதை ஊன்றுகிறார். இதையே ஆர்எஸ்எஸ் பல்வேறு பெயர்களில் பல்வேறு தளங்களில் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி அவற்றை நாடு முழுவதும் பரப்பியது.

நமது டிவி புகழ் ராமசுப்பிரமணியம் போல ஒரு இடத்தில் ராமர் பக்தராகவும், இன்னொரு இடத்தில் சமூக ஆர்வலராகவும், இன்னுமொரு இடத்தில் இசை ஆர்வலராகவும், மற்றொரு இடத்தில் கல்வியாளராகவும் போல பல பெயர்கள் இருந்தாலும் நோக்கம் ஒன்றே.

அரசியல் ரீதியாக இந்து என்ற சொல்லின்கீழ் இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றால் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் Vs பிற இந்தியக் கண்டத்தின் மக்கள் என மோத விட வேண்டும். அதற்கு மத விரோதம் ஏற்படுத்தவேண்டும்.

இதோ இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உங்கள் பகைவர்கள், கோயிலைக் கொள்ளையடிக்க வந்தவர்கள் என்று பகைமை உணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும். அவர்களால் உங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். உங்கள் வழிபாட்டு முறைகளை அழித்துவிடுவார்கள் என்று சொல்ல வேண்டும்.

அவ்வாறு ஏற்படுத்தினால் உருவாகும் மனநிலை கொண்டவர்களை “இந்து” என்ற வலைக்குள் சுலபமாக ஈர்த்துவிட முடியும்.

இதற்காகத்தான் பாகிஸ்தான் பிரிவினையின்போது இஸ்லாமியர்கள் இந்துப்பெண்களை கற்பழித்தார், கொலை செய்தார்கள், துண்டு துண்டாக வெட்டினார்கள் என்று ஆர்எஸ்எஸ் ஷாகாக்களில் சொல்லி சொல்லி வெறுப்பை வளர்க்கிறார்கள்.

சரி…ஈழத்தில் தமிழ் பெண்கள் எங்கள் கண்முன்னே இதேபோல கொல்லப்பட்டார்கள் ஆர்எஸ்எஸ், பாஜக, பஜ்ரங்தள், விஸ்வ இந்து பரிஷத்….எல்லாம் இதே போல சிங்களவர்களை வெறுக்க சொல்லி வலியுறுத்தியதா…?

இல்லையே..சிங்களவர்களை சுப்பிரமணியன் ஸ்வாமி போன்ற பாஜக தலைவர்கள் சொந்தம் கொண்டாடுகிறார்களே ? ஏன்.?? அவர்கள் இந்துக்கள் இல்லையா? அது ஏன் பாகிஸ்தான் எல்லையில் இருந்த பெண்கள் மட்டுமே இந்துக்கள் ஈழத்தில் இருந்தவர்கள் இந்துக்கள் அல்லாமல் போனார்கள்? கேட்கவேண்டாமா?

ஆக,

இந்த இந்துத்துவ அரசியலுக்கு வயதே 1900 ம் ஆண்டுகளின் தொடக்கத்தில்தான்.

என்றால்….தமிழர்கள் எப்படி இயல்பில் இந்துவாக இருந்திருக்க முடியும்? தமிழர்கள் முருகன் வழிபாட்டில் தொடங்கி, குலதெய்வ வழிபாட்டைப் பின்பற்றி பின் ஞான மார்க்கிகளாக உயர்வு பெற்றவர்கள்.

தமிழர்கள் இங்கேதான் தோன்றினார்கள் என்று சொல்வதற்கு சான்றுகள் உள்ளன. சமஸ்கிருதம் எங்கே தோன்றியது? கேட்டால் தேவலோகத்தில் என்பார்கள். தேவலோகம் எங்கே உள்ளது என நாசா இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
காரணம் வேற்று நாட்டார் தாங்கள் என அறிந்தால. உள்நாட்டுக்கார மக்கள் மதிக்க மாட்டார்கள் என்பதாலும், மக்களை அடக்கி ஆளவுமே தேவலோக வண்ணக்கதைகளைத் துணைக்கழைத்தார்கள்.

தரவுகள், சான்றுகள், ஆதாரங்கள், ஆவணங்கள் வலுவாக உள்ள தமிழர்கள் முன்னோடிகளா வெறும் வேதப்புத்தகங்களை மட்டுமே வைத்துக் கொண்டு அதை நிரூபிக்க கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டவர்கள் முன்னோடிகளாக இருக்க முடியுமா? லாஜிக்கலாக இது சரியா?!

தாத்தா நேற்றுப் பிறந்தார் அவருக்குப் பேத்தி போனவாரம் பிறந்தார் என்கிறது இந்துத்துவம்.

தமிழர்கள் ஒருபோதும் இந்துக்கள் அல்ல. இருக்கவும் முடியாது.

இதில் சுவாரஸ்யம் என்னவெனில்…சங்க பரிவாரிகளின் தலைமைக்கு தெளிவாக, நன்கு தெரியும் …தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்று. ஆனால், தொண்டர்களுக்கு தெரியாமல் பார்த்துக்கொள்வார்கள்.