மும்பை:

தெற்கு மும்பையில் கடற்படை அதிகாரிகள் தங்கிருப்பது ஏன்? என மத்திய மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி கேள்வி எழுப்பினார்.

மும்பையில் சர்வதேச கப்பல் முனையை அடிக்கல் நாட்டு விழாவில் கலந்தகொண்ட நிதின் கட்காரி மேலும் பேசுகையில், ‘‘பொதுவாக பயங்கரவாதிகள் ஊடுருவும் எல்லைப் பகுதியில்தான் கடற்படை இருக்க வேண்டும்.

எல்லையில் பயங்கராவதிகளுடன் சண்டையிட்டு நாட்டை காப்பது தான் அவர்களின் கடமை. ஆனால் அனைத்து கடற்படை அதிகாரிகள் தெற்கு மும்பையில் குடியிருக்க விரும்புகிறார்கள்? அவர்கள் என்னிடம் பிளாட் வேண்டும் என்று கேட்டார்கள். அவர்களுக்கு ஒரு இஞ்ச் இடம் கூட கொடுக்க முடியாது,” என்றார்.

மலபார் ஹில்ஸ் பகுதியில் மிதவை ஹோட்டல் மற்றும் கடல் விமான சேவைதளம் ஆகியவை அடங்கிய புதிய திட்டத்தை முன்னெடுக்க இந்திய கடற்படை கோரிய அனுமதியையும் அவர் நிராகரித்துள்ளார்.

“தெற்கு மும்பையில் பிராதான இடத்தில் அனைவரும் பிளாட்கள் மற்றும் குடியிருப்புகளை அமைக்க வேண்டும் என விரும்புகிறார்கள். நாங்கள் உங்களுக்கு (கடற்படைக்கு) மதிப்பளிக்கிறோம், ஆனால் நீங்கள் பாகிஸ்தான் எல்லைக்கு செல்ல வேண்டும் அங்குதான் ரோந்து மேற்கொள்ள வேண்டும்,” என பேசினார் கட்காரி.

‘‘மராட்டிய மாநில கவர்னர், மற்றும் முதல்-மந்திரி உள்ளிட்ட அதிகாரிகள் அதிகாரிகள் அதிகமாக வசிக்கும் பகுதியில் கடற்படையும் இடம் ஒதுக்கீடு செய்ய கேட்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. நாங்கள் தான் அரசு. கடற்படை அல்லது பாதுகாப்பு அமைச்சகம் அரசு கிடையாது’’ என்றார் அவர்.

இந்தியாவின் மேற்கு பிராந்திய கடற்படை கமாண்டர் துணை அட்மிரல் கிரிஷ் லுத்ரா பங்குபெற்ற பொது நிகழ்ச்சியில் கட்காரி இவ்வாறு பேசியுள்ளார். பொது இடத்தில் இவ்வாறு பேசியது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.