நடிகர் அஜித்தின் 60 வது படம் வலிமை. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே அஜித்தின் 61 வது படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வருகிறது.
இந்நிலையில், இயக்குனர் ஏ.எல்.விஜய் தல 61 படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஏ.எல். விஜய் அஜித்தை அண்மையில் சந்தித்து கதை சொல்லியிருக்கிறாராம். அந்தக் கதை அஜித்துக்கு மிகவும் பிடித்திருந்ததாம். ஆதலால் இவர்கள் இருவரும் கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குனர் ஏ.எல்.விஜய் ஏற்கனவே கடந்த 2007-ம் ஆண்டு வெளியான அஜித்தின் கிரீடம் படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.