டில்லி:
உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழா என அழைக்கப்படும் இந்தியாவின் 17வது மக்களவையை கட்டமைக்கும் லோக்சபா தேர்தல் கடந்த 19ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது. இன்று இரவு அல்லது நாளை மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது தெரிய வரும்.
இந்திய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்களவையின் 543 இடங்களில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூர் லோக்சபா தொகுதி தவிர 542 இடங்களுக்கு வெற்றிகரமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
முதல்கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 11-ந்தேதி 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 2வது கட்ட தேர்தல் ஏப்ரல் 18-ந் தேதி 96 தொகுதிகளிலும், 3வது கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ந் தேதி 115 தொகுதிகளிலும், 4வது கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ந் தேதி 71 தொகுதிகளிலும், 5வது கட்ட தேர்தல் 6-ந் தேதி 51 தொகுதிகளிலும் 6வது கட்ட தேர்தல் மே 12-ந் தேதி 59 தொகுதிகளிலும், 76வது கட்ட தேர்தல் மே 19ந்தேதி 59 தொகுதிகளிலும் நடைபெற்று முடிந்தது.
அத்துடன் ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம்ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெற உள்ளது. இதனுடன் தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களும் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு செல்லும் முகவர்கள் பேனா, பென்சில், ரப்பர், பேப்ர், நேட்பேட் போன்றவை எடுத்துச்செல்லாம் என தேர்தல்ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. அத்துடுன் 17சி படிவத்தின் நகலும் எடுத்துச் செல்லாம் என அறிவித்து உள்ளது.
இதையடுத்து வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. . அதைத்தொடர்ந்து ஈவிஎம் வாக்குகள் எண்ணப்படும். இறுதியாக குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 விவிபாட் இயந்திரங்கள் எண்ணப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரப் பழுது காரணமாக வாக்குகள் எண்ண முடியாத நிலை ஏற்பட்டால் அதற்கான விவிபாட் இயந்திரங்கள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காலை 10 மணிக்கு பின்னரே வெளியாகும் என தெரிகிறது. இறுதி முடிவுகள் இன்று இரவு அல்லது நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இந்த தேர்தலில் 8.4 கோடி புதிய வாக்காளர்கள் உள்பட 90 கோடி வாக்காளர்கள் இந்த முறை வாக்களிக்கத் தகுதியானவர்களாக இருந்தனர். ஆனால் சராசரியாக 60 சதவிகிதம் பேர் மட்டுமே தங்களது வாக்குகளை செலுத்தி உள்ளனர்.
பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை உள்ள நிலையில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்ற பலத்த எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.