டில்லி:
இமாச்சல பிரதேசத்தில், பா.ஜ., பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சியை பிடித்திருக்கிறது. ஆனாலும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர், பிரேம் குமார் துாமல் தோல்வி அடைந்துள்தை அடுத்து, முதல்வர் பதவிக்கு, முதல்வராக பொறுப்பேற்கப்போகிறவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் மூத்த தலைவர்கள் ஐந்து பேர், முதல்வர் பதவிக்கான போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஜே.பி.நட்டா: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர். (57) இமாச்சல பிரதேசத்தில் இருந்து, ராஜ்யசபா, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். முதல்வர் பதவிக்கு, இவரே, முதல் தேர்வாக இருப்பார் என்று பாஜக வட்டாரத்தில் பேசப்படுகிறது. பிராமண வகுப்பைச் சேர்ந்த இவருக்கு, இமாச்சல் அரசியலில், நீண்டகால அனுபவம் உண்டு.
அனுராக் தாக்கூர்: ஹமிர்புர் லோக்சபா தொகுதி, எம்.பி. இவர். (43) ஹிமாச்சலில் இருந்து, மூன்று முறை, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த வருடம் பி.சி.சி.ஐ., எனப்படும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பா.ஜ., இளைஞர் பிரிவு தலைவராக முன்பு பொறுப்பு வகித்தவர்.
அனில் சர்மா: முன்னாள், காங்., அமைச்சர், சுக்ராமின் மகன். சட்டசபை தேர்தலுக்கு முன், பா.ஜ.,வில் இணைந்தவர். தற்போதைய, முதல்வர் வீர்பத்ர சிங் தலைமையிலான அமைச்சரவையில், அமைச்சராக பொறுப்பு வகித்தவர்.
நரேந்திர தாக்கூர்: கடந்த, 2003ம் வருடம், பா.ஜ.,வில் இருந்து விலகிய இவர், 2009ல் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., தலைவர், பிரேம் குமார் துாமலுக்கு எதிராக போட்டியிட்டவர். பிறகு, ஹமிர்புர் லோக்சபா தொகுதியில், அனுராக் தாக்கூருக்கு எதிராக போட்டியிட்டவர். சட்டசபை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன், பா.ஜ.,வில் இணைந்தவர்.
இதற்கிடையே, “தற்போது முதல்வர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை. ஆகவே மீண்டும் தற்போதைய முதல்வர் பிரேம் குமார் துாமலே முதல்வராகக் கூடும். ஆறு மாத காலத்துக்குள் ஏதேனும் ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவார்” என்று பிரேம் குமார் ஆதரவாளர்கள் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.