டெல்லி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி யு யு லலித் இன்று பரிந்துரை செய்கிறார்.

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஓய்வுபெற்ற நிலையில், மூத்த நீதிபதியான யுயு லலித், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார். அவர் விரைவில் ஓய்வுபெற உள்ள நிலையில், அடுத்த தலைமை நீதிபதி யார்? என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், இன்று காலை 10:15 மணிக்கு ஓய்வறையில் கூடி, தனது வாரிசு பெயரைக் குறிப்பிடும் கடிதத்தை அளிக்குமாறு சக நீதிபதிகளுக்கு கேட்டுக்கொண்டுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்த கடிதம் சர்ச்சைக்குள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பதவி காலத்தை நிறைவு செய்யும் தலைமை நீதிபதியே, தனக்கு அடுத்து வரப்போகும் தலைமை நீதிபதி யார் என்பதை பரிந்துரை செய்வதே வழக்கமான நடைமுறை. அதன்படி, தனக்கு அடுத்து யார் பதவிக்கு வர வேண்டும் என்பதை தற்போதைய தலைமை நீதிபதி யுயு லலித் பரிந்துரை செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம் அவருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதேபோல், உச்சநீதி மன்றத்தில் தலைமை நீதிபதிக்கு அடுத்த மூத்த நீதிபதியாக இருப்பவரே புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார்.

எனவே, சீனியாரிட்டிபடி உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு டி.ஒய்.சந்திரசூட் பெயர் பரிந்துரை செய்யப்படும் என தெரிகிறது.  தற்போதைய தலைமை நீதிபதி,  யுயு லலித் நவம்பர் 8ந்தேதி ஓய்வுபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமைநீதிபதி குறித்து மத்தியஅரசு தலைமை நீதிபதிக்கு கடிதம்!