மும்பை: சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த யுவராஜ் சிங், தன்னை அச்சுறுத்திய பந்துவீச்சாளர்கள் மற்றும் தனக்குப் பிடித்த பேட்ஸ்மேன்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன்தான் தன்னை அதிகம் அச்சுறுத்திய பந்து வீச்சாளர் என்று கூறியுள்ளார். அவரின் பட்டியலில் இடம்பெற்ற இதர முக்கிய பந்துவீச்சாளர்கள் இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் கிளென் மெக்ராத் ஆகியோர்.

தன்னை அதிகம் கவர்ந்த வெளிநாட்டு கிரிக்கெட் வீரராக யுவராஜ் குறிப்பிட்டிருப்பது ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். இவர் இரண்டுமுறை உலகக்கோப்பையை வென்ற (2003 & 2007) ஆஸ்திரேலிய அணியை வழிநடத்திச் சென்றவர்.

மேலும், இவரைக் கவர்ந்த இதர இரண்டு பேட்ஸ்மென்கள் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில் மற்றும் தென்னாப்பிரிக்க அணியின் டி வில்லியர்ஸ்.

இத்தகைய வீரர்களுடன் தான் விளையாடியதை மகிழ்ச்சியான தருணமாக அசைபோடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.