நெட்டிசன்:

டி.என். கோபாலன் அவர்களது முகநூல் பதிவு:

லண்டனில் நேற்று மதியம் தொழுகை முடித்து வெளியேறிக்கொண்டிருந்த முஸ்லீம்கள் மீது வேனை மோதி பலரைக் கொலை செய்ய முயன்றவனைப் பிடித்து அவனை எல்லோரும் தாக்கத் துவங்கினார்கள். அப்போது  அவனைக் காப்பாற்றி, தள்ளி நில்லுங்கள், நாம் போலீசிடம் ஒப்படைப்போம் அதுவே முறை என வலியுறுத்தி, காவலர்கள் வரும் வரை அவனுக்கு பாதுகாப்பாகவும் நின்றிருக்கிறார் இளம் இமாம்..

எல்லோரும் வாயாரப் புகழ்கின்றனர்…நாமும் தான்!  சட்டம், ஒழுங்கு, நாகரிகம் தழைக்க இதுவே வழி