டெல்லி: சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை தாமதத்துக்கு யார் காரணம்? என நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்விக்கு மத்தியஅமைச்சர் கர்கரி பதில் அளித்துள்ளார்.
சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணிகள் பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில், எக்ஸ்பிரஸ் சாலை அமைப்பதில், “தமிழகத்தில் தான் பணிகள் தாமதம் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டி உள்ளார்.
நிலம் கையகப்படுத்துவதில் அரசின் மெத்தனம், சாலை வடிவமைப்பு மாற்றங்கள், திடீர் மழை, சட்டச்சிகல்கள் உள்பட பல்வேறு காரணங்கள் தாமதத்திற்கான காரணங்கள் என தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவின் இரு முக்கிய நகரங்களான சென்னை மற்றும் பெங்களூர் நகரங்களை இணைக்கும் வகையில் புதிய எக்ஸ்பிரஸ் சாலையை ஏற்படுத் கடந்த 2022ம் ஆண்டு பிரதமர் மோடி பணிகளை தொடங்கி வைத்தார். ஓராண்டுக்குள் பணிகளை முடக்கி திட்டமிட்டிருந்தது. அதாவது, 2023ம் ஆண்டு இறுதியிலேயே இந்தப் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த பணிகள் பல்வேறு காரணங்களால் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இதனால், சென்னை பெங்களூ சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளாக வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் , திமுக ராஜ்ய சபா எம்பி பி.வில்சன், இந்த சாலை தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் தறை அமைச்சர் நிதின் கட்கரி, குடியாலா முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான எக்ஸ்பிரஸ் சாலையின் மூன்றாம் கட்டப் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
குடியாலா – வாலாஜாபேட்டை குறிப்பாக, குடியாலா முதல் வாலாஜாபேட்டை வரையிலான முதல் பேக்கேஜ் கடந்தாண்டு மே மாதமே முடிந்திருக்க வேண்டும். ஆனால், இப்போது வரை அது முடியவில்லை. தற்போது 86.22% மட்டுமே கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. இந்தப் பணிகள் வரும் அக்டோபர் மாதம் தான் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ச்சியான மழை, ரயில்வே பாதைகளுக்குமேல் அமைக்கப்படும் மேம்பாலங்களுக்கான அனுமதி கிடைப்பதில் தாமதம், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகள், தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றக் கட்டுப்பாடுகள் காரணமாகக் கட்டுமான பணிகளைத் தாமதப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அரக்கோணம் – காஞ்சிபுரம் அரக்கோணம் முதல் காஞ்சிபுரம் வரையிலான இரண்டாம் பேக்கேஜ் நிலைமை தான் மோசமான நிலையில் உள்ளன. அந்தப் பகுதியில் இதுவரை 53.56% பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. கூடுதல் உயர் அழுத்த மின்சாரக் கம்பிகளை மாற்றுவதில் ஏற்பட்ட நிலம் மற்றும் பயிர்ச் சேதத்திற்கான இழப்பீடு பிரச்சினைகளை முடிக்க தமிழ்நாடு அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்காததால், பணிகள் குறிப்பிட்ட நாட்களில் முடிக்க முடியாத நிலை உள்ளது. இதுபோன்ற சிக்கல்களால், ஒப்பந்ததாரர் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடி போன்றவை தாமதத்திற்கான காரணமாக அமைகிறது என்றவர், இதனால் இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் அடுத்த ஆண்டு (2026 மார்ச் மாதம்ஸ்ர) முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஞ்சிபுரம்- ஸ்ரீபெரும்புதூர் காஞ்சிபுரம் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான கடைசி பேக்கேஜ் (Package IV) ஓரளவுக்கு பரவாயில்லை எனச் சொல்லலாம். இந்தப் பகுதியில் 78.11% நிறைவடைந்துள்ளன. ஆனால் தொடர்ச்சியான மழை, அங்குள்ள பொருட்களை இடம் மாற்றுவதில் ஏற்படும் தாமதம், கடன் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இப்பணிகளும் தாமதமாகி வருகின்றன. இந்தாண்டு டிசம்பர் மாதம் தான் பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரம்பெட் இன்டர்சேஞ்ச் அதேபோல ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே NH-48 உடன் எக்ஸ்பிரஸ் சாலையை இணைக்கும் ட்ரம்பெட் இன்டர்சேஞ்ச் திட்டமும் தாமதமாகி வருகிறது.. இந்தப் பணிகளை அடுத்த மாதம், அதாவது ஆகஸ்டில் முடிப்பதே ஒரிஜினல் திட்டம். ஆனால், இப்போது வரை வெறும் 18.82% மட்டுமே கட்டுமானம் முடிவடைந்துள்ளது. அடித்தளத்தில் வடிவமைப்பு மாற்றங்கள் மற்றும் இந்தியன் ஆயில் குழாய் இடமாற்றம் செய்யப்பட வேண்டியிருப்பதால் இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிபாலா முதல் வாலாஜாபேட்டை- 86.22% அரக்கோணம் முதல் காஞ்சிபுரம் வரை – 53.56% காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் – 78.11% ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே அமையும் டிரம்பெட் இன்டர்சேஞ்ச் – 18.82% 262 கி.மீ தூரம் கொண்ட இந்த எக்ஸ்பிரஸ் சாலை பயன்பாட்டிற்கு வரும் போது இது சென்னை பெங்களூர் பயண நேரத்தைக் கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.