வெற்றிபெறப் போவது யார்? இலங்கை அதிபா் தோதலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

Must read

கொழும்பு:

லங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. தற்போது அங்கு விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இலங்கையின் 7வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான 8வது ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் முதன்முறையாக இந்த தேர்தலில்  35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதனால்  26 அங்குல வாக்குசீட்டு அமைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம்தெரிவித்து உள்ளது. மேலும், இந்த தேர்தலில் 1கோடியே 59 இலட்சத்து 92 ஆயிரம் வாக்காளர்கள், தங்கள் வாக்குகளை செலுத்த உள்ளனர். இதற்காக  12,845 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

வாக்குகள் எண்ணிக்கைக்காக 43 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதுபோல தேர்தல் பணிகளில்  60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 3லட்சம் தேர்தல் பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

வாக்குப்பதிவு முடிவடைந்ததும், வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்பட்டு வாக்கு எண்ணும் பணி தொடங்கும். நாளை காலை வாக்கு எண்ணிக்கை நிலவரம் தெரியவரும் என்று  தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேர்தலில்,  முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே கட்சியின இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி சாா்பில் அவரது சகோதரர்   கோத்தபய ராஜக்சே (70)  போட்டியிடுகிறார். இவர் இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலராக இருந்தபோதுதான்,விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்டப் போர் நடைபெற்றது. இதனால், இவருக்கு சிங்கள வாக்காளா்களிடையே செல்வாக்கு உண்டு.

ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சாா்பில், முன்னாள் அதிபா் பிரேமதாசாவின் மகனும், வீட்டு வசதி மற்றும் கலாசார விவகார அமைச்சருமான சஜித் பிரேமதாசா (52) போட்டியிடுகிறாா். அவருக்கு தமிழா் தேசியக் கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது.

இவா்களைத் தவிர, ஜனதா விமுக்தி பெரமுனா சாா்பில் போட்டியிடும் அனுரா குமார திஸநாயகே (50) இந்தத் தோதலில் பலம் வாய்ந்த வேட்பாளா்களில் ஒருவராகக் கருதப்படுகிறாா்.

இந்த அதிபா் தோதலில், பொதுஜன பெரமுனா வேட்பாளா் கோத்தபய ராஜபட்சவுக்கும், ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளா் சஜித் பிரேமதாசாவுக்கும் பலத்த போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிது.

அதேவேளையில்,  இலங்கையில், பதவியில் இருக்கும் அதிபரோ, பிரதமரோ அல்லது எதிா்க்கட்சித் தலைவரோ போட்டியிடாத முதல் அதிபா் தோதல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article