லண்டன்,

ந்தியா பாகிஸ்தான் இடையே  சாம்பியன்ஸ் டிராபி கோப்பை இறுதி போட்டி இன்று நடைபெறுகிறது.  நாடு முழுவதும் உள்ள இந்தியா பாகிஸ்தான் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் இறுதி இன்று லண்டனில் நடைபெறுகிறது.

உலக கோப்பைக்கு சமமாக நடத்தப்படும்,  ‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் 8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் திருவிழா இங்கிலாந்தில் கடந்த 1-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில் டாப்-8 அணிகள் மட்டுமே பங்கேற்க முடியும். இந்த போட்டிகளில் லீக், அரை இறுதி சுற்று முடிவில் வென்ற இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறின.

அதைத்தொடர்ந்து இந்தயாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே இறுதிப்போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இரு நாட்டு ரசிகர்களும் பலத்த எதிர்பார்ப்புகளிக்கிடையில் கோப்பை தட்டிச்செல்லப்போவது யார் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.  இதில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் போட்டி ஒன்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்க இருப்பதால் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

தொடர்ந்து வெற்றிக்கிரிடத்தை சூட்டிவரும் இந்தியா, சாம்பியன்ஸ் கோப்பையில் இறுதி சுற்றை எட்டியிருப்பது இது 4-வது முறையாகும்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தவான் மற்றும் ரோகித் சர்மா இன்றைய போட்டியிலும் அதகளம் செய்வார்கள் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து இருக்கின்றனர். மேலும் கேப்டன் விராட் கோலி, யுவராஜ்சிங், விக்கெட் கீப்பர் டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் நம்மிடம் இருக்கும்போது கோப்பையை நாம் கைப்பற்றுவோம் என்று ரசிகர்கள் நம்பிக்கையோடு, பட்டாசு வெடிக்க காத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே நடைபெற்ற பாகிஸ்தானுடனான லீக் போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை நமது அணியினர் விரட்டியடித்தனர்.

‘இதன் காரணமாக கடும் கோபத்துடன் இருக்கும் பாகிஸ்தான் அணியினர், இறுதிப்போட்டியில் இந்தியாவுடனான போட்டியின்போது ஆக்ரோஷமாக விளையாடுகள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

காயத்தால் அரைஇறுதியில் விளையாடாத வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் இந்தியாவுடனான இறுதி போட்டியில் களமிறங்குகிறார். இந்திய அணியை தோற்கடித்தே தீருவது என பல்வேறு வியூகங்களை தீட்டியுள்ள பாகிஸ்தான் அணி, முந்தைய தோல்விக்கு பழிதீர்க்க வேண்டும் என்பதில் வெறித்தனமாக உள்ளது.

அணி விவரம்

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), யுவராஜ்சிங், டோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் அல்லது உமேஷ் யாதவ், புவனேஷ்வர்குமார், பும்ரா.

பாகிஸ்தான்: அசார் அலி, பஹார் ஜமான், பாபர் அசாம், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), இமாத் வாசிம், ஹசன் அலி, முகமது அமிர், ஜூனைட் கான், ஷதப் கான் அல்லது ருமான் ரயீஸ்.

இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.