டில்லி,

உ.பி.சமாஜ்வாதி கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக, கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான சைக்கிள் சின்னம் யாருக்கு என்று கிடைக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் ஆளும் கட்சியான சமாஜ்வாடி கட்சி தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக  இரண்டாக பிளவுபட்டுள்ளது.

சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம்சிங் யாதவ் தலைமையில் ஒரு பிரிவும் அவர் மகன் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் தலைமையில் மற்றொரு பிரிவும் செயல்பட தொடங்கியுள்ளன.

சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் சின்னமான சைக்கிள் சின்னத்தை கைப்பற்ற முலாயம், அகிலேஷ் இரு தரப்பினருக்கும் தேர்தல் கமி‌ஷனில் மனு கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் சைக்கிள் சின்னத்தை யாருக்கு கொடுப்பது என்பது பற்றி தலைமை தேர்தல் கமி‌ஷன் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக முலாயம், அகிலேஷ் இருவருக்கும் தேர்தல் கமி‌ஷன் நோட்டீசு அனுப்பியுள்ளது.

வரும் 13ந்தேதி வெள்ளிக்கிழமை இருவரையும் நேரில் விசாரணைக்கு வருமாறு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் தங்கள் ஆதரவு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை நிரூபிக்க தயாராகி வருகிறார்கள்.

அகிலேசுக்கு மொத்தம் உள்ள 229 எம்.எல்.ஏ.க்களில் 214 பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வரும் வெள்ளிக்கிழமை (13ந்தேதி) தேர்தல் கமிஷன் முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது