அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயின் ஒஸ்லோவில் உள்ள நார்வே நோபல் குழுவால் வழங்கப்படுகிறது
1901 முதல் அமைதிக்கான நோபல் பரிசு 105 முறை வழங்கப்பட்டுள்ளது
111 தனிநபர்கள் மற்றும் 28 அமைப்புகளுக்கு அமைதிப் பரிசு வழங்கப்பட்டுள்ளது

மொத்தம் 338 பேர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
2014ம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலர் மலாலா யூசுப்சாய் தனது 17வது வயதில் இந்தப் பரிசை வாங்கியதன் மூலம் மிக இளம் வயதில் அமைதிக்கான பரிசை வாங்கியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
அதேபோல் 1995ம் ஆண்டு இந்த பரிசை வாங்கிய ஜோசப் ரோட்ப்ளாட் 86 வயதில் இப்பரிசை வாங்கி இதைப்பெற்ற மிக வயதான நபர், என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
நோபல் அமைதிப் பரிசுக்கான பரிந்துரைகள் 50 ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது…