வாஷிங்டன்
கொரோனா வைரஸ் தாக்குதலைத் தடுக்கும் 2 தடுப்பு மருந்துகள் சோதனைக்குத் தயாராக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வரும் கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க மருந்துகள் இல்லை. இதைக் கண்டுபிடிக்கப் பலநாடுகளும் முயன்று வருகின்றன. அத்துடன் கொரோனாவை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை
மலேரியாவுக்கு அளிக்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுவின் மருந்து பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மிகவும் தேவை உள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு மருந்துகளையும் மற்றும் கொரோனா சிகிச்சை மருந்துகளையும் கண்டுபிடிக்க அமெரிக்காவின் பிட்ஸ்பர்ட்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
உலக சுகாதார நிறுவனம், “அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கொரோனா வராமல் தடுக்க பிட்கோவிக் என்னும் தடுப்பூடியை கண்டு பிடித்துள்ளனர். இத்துடன் இரண்டு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை எலிகளுக்குச் செலுத்தி சோதனை செய்யப்பட்டது.
தற்போது மனிதர்களுக்குச் செலுத்தி சோதனை செய்ய இந்த மருந்துகள் தயார் நிலையில் உள்ளன அத்துடன் 6 வகையான மருந்துகள் ஆய்வக சோதனைக்கு முந்தைய நிலையில் உள்ளன. இந்த சோதனைகள் வெற்றி பெற்றால் கொரோனாவுக்கு நிரந்தர தீர்வு உண்டாகும்” என அறிவித்துள்ளது.