பெங்களூரு: நித்தியானந்தா எங்கிருக்கிறார் என 18ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நித்தியானந்தா மீது கடத்தல், சிறுமிகளை அடைத்து வைத்தல் என பல குற்றங்களில் உள்ளன. குஜராத்தில் உள்ள அவரது ஆசிரமும் மூடப்பட்டது.
நித்தியானந்தாவின் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டது. ஆனால் புதிது புதிதாக வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
கைலாச நாட்டை உருவாக்க போவதாக அறிவித்தார். இந் நிலையில் லெனின் கருப்பன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தொடந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், 12ம் தேதிக்குள் நித்தியானந்தாவின் இருப்பிடம் குறித்து கூறவேண்டும் என்று ஆணையிட்டது. ஆனால் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
எனவே, நித்தியானந்தா எங்கிருக்கிறார் என்று 18ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.