கொழும்பு: ரஜினியின் காலா, விஜயின் கத்தி படத்தை இலங்கையைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளரான லைகா தயாரித்தபோது பாரதிராஜா, முருகதாஸ் எங்கே போனீர்கள்? இலங்கை சமூக ஆர்வலர் எஸ்.டி. நளினி ரத்னராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.
லைக்கா உரிமையாளர்கள் முரளியை விட மஹிந்த அரசுக்கு பெரும் ஆதரவு தருபவர்கள் கூட்டு சேர்ந்து பல நடவடிக்கைகளை வியாபாரங்களையும் செய்பவர்கள் இவர்களைக் கொண்டு முருகதாஸ் மற்றும் மற்றைய தயாரிப்பாளர்கள் எத்தனையோ படம் எடுத்தார்கள்?
காலா படத்தில் ரஜினிகாந்த் நடித்தார், கத்தி படத்தில் விஜய் நடித்தார் , தமிழ் மக்களுக்கு எதிரான லைக்கா போன்ற துரோகிகளின் நிதியில் படம் எடுக்க வேண்டாம் என்றும் நடிக்க வேண்டாம் என்று ரஜினிகாந்த் ஐயோ விஜயும் முருகதாசுக்கு சொல்லவில்லை ????
ராஜபக்ஷ குடும்பத்துக்கு நெருங்கியவர்கள் நிதி இட்ட படத்தை ஆகா ஓகோ என்று எல்லோரும் ரசித்தீர்களா தானே ????
அப்போதெல்லாம் நம்முடைய சுயகௌரவம் அங்கே போனது தமிழ் உணர்வு எங்கே போனது பணம் வந்தால் பத்தும் பறந்து விடும் என்பது இதுதானோ ¿??
என கடுமையாக சாடியுள்ளார்.