புதுடெல்லி:
கொரோனா தடுப்பூசிகள் எங்கே என டிவிட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதுவரை இந்தியாவில் தற்போது 35 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
எனினும் சில மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இருந்து வருவதாக கூறப்படுகிறது.தடுப்பூசி பற்றாக்குறை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பூசிகள் எங்கே என டிவிட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜூலை மாதம் வந்துவிட்டது, கரோனா தடுப்பூசி இன்னும் வரவில்லை, தடுப்பூசி எங்கே? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ஒன்றிய அமைச்சர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; ஆனால் கொரோனா தடுப்பூசிகள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.