நாம் ஒவ்வொருவரும் அன்றைய தேவைகளுக்கு பணத்தை செலவழித்து வருகிறோம். இந்த பணம் எனப்படும்ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள் எங்கே தயார் செய்யப்படுகிறது என்பது பலருக்கு தெரியாது. அதுபற்றி தெரிந்துகொள்ளுங்கள் மக்களே…
ஒவ்வொரு இந்தியரும் நமது நாட்டின் ரூபாய் நோட்டுக்கள் நாணயங்கள் (Coins of the Indian rupee) எங்கே அச்சிடப்படுகிறது அதன் வரலாறு என்ன என்பது குறித்து தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
இந்திய ரூபாய் மற்றும் நாணயங்கள் 1950 முதல் அச்சிடப்பட்டுவருகின்றன. அதன் பிறகு ஆண்டுதோறும் புதிய நாணயங்கள் உற்பத்தி செய்யப்பட்டுவருகின்றன. அவை இந்திய நாணய முறையின் மதிப்பு வாய்ந்த அம்சமாக உள்ளன.
செல்லாக் காசாக்கப்பட்ட நாணயங்களைத் தவிர தற்போது 50 பைசா முதல் நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. இந்த நாணயங்கள் அனைத்தும் இந்தியாவின் கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், நொய்டா ஆகிய இடங்களில் அமைந்துள்ள நான்கு காசாலைகளில் தயாரிக்கப்படு கின்றன.
இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது என்பது பலருக்கு தெரியும். ஆனால் நாணயங்கள் தயாரிக்கப்படுவது குறித்து பெரும்பாலானோர் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்திய நாணயங்கள் டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன.
எந்த நாணயம் எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதற்கும் ஒரு குறி இடப்படுகிறது. நாணயங்க ளின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனைப் பார்த்திருப்பீர்கள்.
அத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும்.அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை அறியமுடியும். நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே,
ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும்,
டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பாயிலும்,
நட்சத்திர வடிவம் இருந்தால் அது ஹைதராபாத்திலும்,
எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும்தயாரிக்கப்பட்டது ஆகும்.
சரி…உங்கள் பையில் உள்ள நாணயத்தினை எடுங்கள்; எந்தக் குறி இருக்கிறது என்று பாருங்கள். அது எந்த ஊரில் தயாரானது என்று தெரிந்துவிடும்.