300 ஆண்டுகளுக்கு முன் அந்தப்புர பெண்களுக்கு சேவை செய்ய வந்த தெலுங்கர்கள் எல்லாம் தமிழர்களா ? என்ற நடிகை கஸ்தூரியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிராமணர்களை இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தனி சட்டம் வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய நடிகை கஸ்தூரி :

“300 வருஷத்துக்கு முன்ன ஒரு ராஜாவுக்கு கூட சேர்த்துகிட்ட அந்தப்புர மகளிருக்கு சேவைகள் செய்ய வந்த தெலுங்கு பேசுகிறவர்கள் எல்லாம் இன்னைக்கு தமிழர்கள் இனம் அப்படின்னு சொல்லும்போது எப்பவோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்ல நீங்கள் யார்?” என்று நடிகை கஸ்தூரி பேசினார்.

நடிகை கஸ்தூரியின் இந்த பேச்சு சர்ச்சை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து பல தரப்பில் இருந்து இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.