டில்லி
நாட்டில் பங்குச் சந்தை உயர்ந்து வரும் வேளையிலும் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவது குறித்து பிரதமரின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கேள்வி எழுப்பி உள்ளார்.
ரதமர் மோடியின் முன்னாள் முதன்மை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் மிகப் பெரிய பொருளாதார நிபுணர் ஆவர். இவர் பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் முதலாவதாக நியமிக்கப்பட்டவர் ஆவார். அவர் தற்போது இந்திய மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நடந்த விழாவில் கலந்துக் கொண்டார்.
அந்த நிகழ்வில் அரவிந்த் சுப்ரமணியன், “தற்போது இந்தியப் பங்குச் சந்தை ஏறுமுகமாக உள்ளது. இன்றைய பங்குச் சந்தை வர்த்தக மதிப்பு 41.719.29 ஆக உயர்ந்துள்ளது. இதில் 30 முக்கிய பங்குகளின் மதிப்பு உய்ர்ந்துளது. மும்பை பங்குச் சந்தையில் 115.35 புள்ளிகள் முன்னிலையும், தேசிய பங்குச் சந்தையில் 38.05 புள்ளிகள் முன்னிலையும் இன்றைய சந்தை முடிவில் காணப்பட்டுள்ளன.
ஆனால் இந்தியப் பொருளாதாரம் தற்போது அபாய நிலையில் உள்ளது அதாவது தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டிய நோயாளியின் நிலையில் உள்ளது. இது எவ்வாறு நிகழ்கிறது என்னும் கேள்வி எழுகிறது. இது ஏன் நடக்கிறது என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.
இது குறித்து அரசு தரப்பினர் விளக்கம் அளித்தால் நான் அமெரிக்காவை விட்டு இங்கு வந்து மேலும் பால் இனங்களை கற்றுக் கொள்வேன். இதைப் போல பலவற்றை நான் கற்றுக் கொள்ள வேண்டியது உள்ளது குறிப்பாக இந்தியப் பொருளாதாரச் சந்தை எனக்குப் புரியவில்லை” என உரையாற்றி உள்ளார்.