டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்க உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் தீவிர ஆய்வில் இறங்கி உள்ளன. அதில் வெற்றி பெற்ற சில நிறுவனங்கள், தயாரித்துள்ள தடுப்பூசியை மக்களுக்கு பயன்படுத்த பல்வேறு உலக நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன.
இந்தியாவில் விரைவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந் நிலையில் நாட்டில் கொரோனா தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி விட்டது.
உலகம் முழுவதும் தற்போது வரை 23 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி எப்போது தொடங்கும் என்று கூறி உள்ளார்.