சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் நடத்துவது குறித்து, ஆலோசனை நடத்திவரும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்வர் தலைமையிலான அதிகாரிகள் இன்று தமிழக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறது. இன்று (26) மற்றும் நாளை (27) ஆகிய நாட்களில் தமிழ் நாட்டில் இக்குழு தன் ஆய்வு பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பிப்ரவரி 25ந்தேதி அன்று தனது குழுவினருடன் சென்னை வந்தார். அவரதுகுழு நேற்று புதுச்சேரி அரேசியல் கட்சியினர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று தமிழ்நாட்டில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை தனித் தனியாகச் சந்தித்து, தேர்தலை வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவது குறித்து இன்று கருத்து கேட்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஆயுட்காலம் மே மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், அதற்குள் தேர்தலை நடத்தி புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வருகிறது. ஏற்கனவே தேர்தல் நடவடிக்கை தொடர்பாக, 1,444 அதிகாரிகள், 714 பொது பார்வையாளர்கள், 233 காவல் பார்வையாளர்கள், 497 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உரிய பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.
அதுபோல, தேர்தல் ஆணையஅதிகாரிகள் குழு பிப்ரவரி 13, 14 தேதிகளில் தமிழகம் வந்து, மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்கள், ஐஜி-க்கள், வருமான வரி, அமலாக்கத் துறை, சுங்கத்துறை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு தமிழ்நாடு வருகை தந்துள்ளது. இந்த குழுவினர் நேற்று புதுச்சேரி சென்று அங்கு நடைபெறும் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தது.
அதனைத் தொடர்ந்து இன்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், சென்னையில் தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது தேர்தலை நேர்மையுடன், வெளிப்படைத் தன்மையுடன் நடத்துவதற்கான அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளை பெறுகிறார்.
ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் தனித்தனியே சந்தித்து ஆலோசனை பெற திட்டமிட்டிருப்பதாதக தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, நாளை (பிப்.27) மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பி-க்கள், ஐஜி-க்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர். அப்போது, வாக்குச்சாவடி மைய ஏற்பாடுகள், தேவையான பணியாளர்கள், அவர்களுக்கு வழங்க உள்ள தேர்தல் பயிற்சிகள், வாக்கு எண்ணிக்கை மைய ஏற்பாடுகள், தேர்தல் பாதுகாப்பு, தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்த தேவையான காவல்துறையினர் உள்ளனரா, பதட்டமான, மிகவும் பதட்டமான வாக்குச்சாவடிகள், பண விநியோகத்தை தடுக்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனையை கண்காணிப்பற்கான திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்க உள்ளனர்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு, தலைமைத் தேர்தல் ஆணையர் செய்தியாளர்களையும் சந்தித்து பேசுவார். அதன்பிறகு சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]