மூக வலைதளமான வாட்ஸ்அப், ஒரு நாளைக்கு 100 கோடி பேர் பயன்படுத்துவதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்து உள்ளது.

சமூக வலைதளங்களில் பேஸ்புக் மாதந்தோறும் 200 கோடி பயனாளர்களை பெறும் நிலையில் அதன் துனை நிறுவனமாக விளங்கும் வாட்ஸ்அப், நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 கோடி பயனாளர்களையும், மாதந்தோறும் 130 கோடி பயனாளர்களையும் பெற்றுள்ளதாக தனது அதிகாரப்பூர்வ தளத்தில் வாட்ஸ்அப் செய்தி வெளியிட்டுள்ளது.

 

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ள  வாட்ஸ்அப் செயலி உலகம் முழுவதும் 60 மொழிகளில் பயன்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.

இதன்  மூலம் 55 பில்லியன் தகவல்கள் அதாவது ஐந்தாயிரத்து 500 கோடி தகவல்கள் தினந்தோறும் பகிரப்படுவதாகவும்  தெரிவிக்கப் பட்டுள்ளது.

இவற்றில் தினமும் நூறு கோடி தகவல்கள் வீடியோ வடிவிலும், 450 கோடி தகவல்கள் புகைப்பட வடிவிலும் பகிரப்படுவதாக வாட்ஸ் அப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் மட்டும் 20 கோடி பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் செயல்பாட்டுக்கு வந்த தினசரி மாறும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வசதியை தினசரி 250மில்லியன் பயனார்கள் பயன்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் செயலியில் உள்ள இதுபோன்ற வசதியை 166 மில்லியன் மக்களே பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறி உள்ளது.

2014 ஆம் ஆண்டில் 450 மில்லியன் பயனாளர்களை கொண்ட நிறுவனமாக இருந்த வாட்ஸ்ஆப்பினை ஃபேஸ்புக் $19 பில்லியன் மதிப்பில் கையகப்படுத்தியது ஃபேஸ்புக் நிறுவனம்.