ஃபேஸ்புக்கை ‘டெலிட்’ செய்ய வேண்டிய நேரம் இது!” வாட்ஸ்அப் பிரையன் ஆக்டன்

பேஸ்புக்கை நீக்கவேண்டிய தருணம் இது என  வாட்ஸ்ஆப் செயலியின் இணை நிறுவனரான பிரையன் ஆக்டன் தனது டுவிட்டர் வலைபதிவில் பதிவிட்டுள்ளார்.

“It is time. #deletefacebook” என இன்று அவர் டுவிட்டியுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு, அமெரிக்காவில் நடைப்பெற்ற அதிபர் தேர்தலில்,  டொனால்டு டிரம்ப் வெற்றி பெற வேண்டும் என்று லண்டனைச் சேர்ந்த  கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்குப் பேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்களை அந்நிறுவனம் முறைகேடாக அளித்தது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த பிரச்சினை உலகம் முழுவதும் பூதாகாரமாக எழுந்துள்ள நிலையில்,பேஸ்புக் சமூக வலைதளம் பாதுகாப்பற்றது என்ற கருத்து நிலவி வருகிறது.

இதுகுறித்து,    ஐரோப்பிய மற்றும் அமெரிக்கப் பேஸ்புக் நிர்வாகம், ஃபேஸ்புக் நிறுவனர், மார்க் ஜூக்கர்பெர்க்கை விசாரணைக்கு அழைத்துள்ளது.

பேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் வெளியில் தெரிவிக்கக் கூடாது என்று பேஸ்புக் நிறுவனத்திற்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில்,  5 கோடி  வாடிக்கையாளர்களின் தகவல்களை அந்நிறுவனம், முறைகேடாக கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா  நிறுவனத்திற்கு  வழங்கி, டொனால்டு டிரம்ப் வெற்றிக்கு உதவி புரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, பங்குசந்தையில், பேஸ்புக் நிறுவனப் பங்கு பெரும் சரிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

இந்நிலையில், வாட்ஸ்அப் சமூக வலைதளத்தின் இணை  இணை நிறுவனரான பிரையன் ஆக்டன்,  தனது டுவிட்டர் பக்கத்தில்,   “It is time. #deletefacebook” என  பதிவிட்டுள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: WhatsApp co-founder tweets 'It is time. Delete Facebook', ஃபேஸ்புக்கை 'டெலிட்' செய்ய வேண்டிய நேரம் இது!" வாட்ஸ்அப் பிரையன் ஆக்டன்