சென்னை: ‘ஆட்சியில் பங்கு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?’  என  காங்கிரஸ் சட்டப்பேரவை முன்னாள் தலைவரும்,  முன்னாள் எம்எல்ஏவும்,    காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவருமான கே.ஆர்.ராமசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றிருந்தாலும், அவ்வப்போது ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் முதல்  தொண்டர்களிடையே வலுத்து வருகிறது. ஆனால், சிலரின் சுயநலத்துக்காக காங்கிரஸ் கட்சி, திராவிட கட்சிகளை சுமந்து வருகின்றன.  தமிழ்நாட்டில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தன்மானத்தை இழந்து சுமைதாங்கியாக திகழ்கிறது.

இந்த நிலையில், சமீபத்தில் கட்சியை தொடங்கி உள்ள விஜய், கூட்டணி ஆட்சி என்றும், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்றும் கொளுத்தி போட்டு அரசியல் களத்தில்  சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.  இதையடுத்த,   கூட்டணிக்குகட்சிகளுக்கு அதிகாரத்தில்  பங்கு வேண்டும் அனைத்து கட்சிகளும்  பேசத்தொடங்கி உள்ளன. இதனால், திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில்,  ஏப்​ரல் 14-ம் தேதி செல்​வப்​பெருந்​தகை​யின் பிறந்த நாளுக்​காக கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் ஷெரிப், ‘ஆட்​சி​யில் பங்கு அதி​காரத்​தி​லும் பங்கு – 2026-ன் துணை முதல்​வரே’ என போஸ்​டர் அடித்து புரட்சி செய்​திருந்​தார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த செல்​வப்​பெருந்​தகை, திமுகவிடம் தன்னை கோர்த்துவிட்டுவிட்டதாக எண்ணி, உடடினயாக மாநிலச் செய​லா​ளர்  ஷெரிப்​புக்கு விளக்​கம் கேட்டு நோட்​டீஸ் அனுப்பினார். அது நகைப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நேற்று சென்னையில்,   சென்​னை​யில் நடை​பெற்ற காங்​கிரஸ் மாவட்ட தலை​வர்​கள் கூட்​டத்​தில் பேசிய, காங்கிரஸ் சட்டப்பேரவை முன்னாள் தலைவரும், தற்போதைய ,  காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவருமான கே.ஆர்.ராமசாமி,  ‘ஆட்சியில் பங்கு கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?’   என்று கேள்வி எழுப்பியதுடன்,   “அப்​படி போஸ்​டர் அடித்​த​தில் என்ன தவறு இருக்​கிறது?” என்று கேட்​டிருக்​கி​றார். இது காங்கிரஸ் கட்சி தலைவர்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள  கே.ஆர்​.​ரா​ம​சாமி​,  “நாங்​கள் திமுக கூட்​ட​ணி​யில் இருக்​கி​றோம். கட்சி நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் அவர்​கள் விருப்​பத்​தைச் சொல்​கி​றோம். எங்​களுக்​கும் ஆட்​சி​யில் பங்கு வேண்​டும் என தெரி​விப்​ப​தில் தவறில்​லை. இதில் நாங்​கள் பின் வாங்​க​வில்​லை. காங்​கிரஸ் மாநில தலை​வரை, துணை முதல்​வர் என ஷெரிப் வெளிப்​படுத்​தி​யது அவரது விருப்​பம். இதற்கு நோட்​டீஸ் அனுப்​பத் தேவை​யில்லை என்​பது எனது கருத்​து. அதனால், நோட்​டீஸ் அனுப்​பியதை நாங்​கள் ஏற்​றுக் கொள்ள​ வில்​லை.

கட்​சி​யினரின் ஆர்​வத்தை இப்​படி ஆரம்​பத்​திலேயே கிள்ளி எறிந்​தால் கட்​சியை வளர்த்​தெடுக்க முடி​யாது. தொண்​டர்​களும் சோர்ந்து விடு​வார்​கள். ஆட்​சி​யில் பங்கு கேட்க காங்​கிரஸ் கட்​சிக்​கும் உரிமை இருப்​பது நியா​யம்​தானே?

மீண்​டும் நான் தேர்​தலில் நிற்க வேண்​டும் என்று சொன்​னால் கட்​சி​யில் எனக்கு சீட் கொடுத்​து​விடு​வார்​கள். ஆனால், நான் கட்​சியை வளர்க்க வேண்​டும் என நினைக்​கிறேன். அதற்​காகத் தொடர்ந்து பணி​யாற்​றிக் கொண்​டிருக்​கிறேன்” என்​று சொன்னார் அவர்.

கே.ஆர்.ராமசாமி, மறைந்த ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில், சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவர். மேலும், இவர் முன்னாள் மத்திய நிதி அமைச் சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.