டில்லி:
இன்று அதிகாலை காஷ்மீரில் அத்துமீறி நுழைந்த இந்திய விமானப்படை அங்கு பயங்கரவாத முகாம்களை குண்டு வீசி அழித்தது. இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் 12 மிராஜ் ஜெட் போர் விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று பாகிஸ் தானின் முக்கிய தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3 மணியளவில் சுமார் 1000 கிலோஅளவிலான வெடிகுண்டுகளை வீசி பயங்கரவாதிகள் முகாம்களை முற்றிலுமாக அழித்தன.
இதில் பாகிஸ்தானில் இயங்கிய வந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம்கள் அழிக்கப் பட்டுள்ளன என்று செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், பாகிஸ்தானும் இந்தியா மீது தாக்குதல் நடத்தக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதையடுத்து, எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்பத குறித்து பிரதமர் மோடி தலைமையில் தலைமையில் இந்திய பாதுகாப்பு துறைக்கான அமைச்சர் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. மூத்த அமைச்சர்கள் அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், நிர்மலா சீதாராமன், அருண்ஜெட்லி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் அடங்கிய குழு பங்கேற்றுள்ளது.
கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டதாகவும், மேலும் பாகிஸ்தான் எதிர் தாக்குதல் நடத்தினால் எந்த மாதிரி சமாளிக்க வேண்டும் என்பது குறித்தும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.