தி.மு.க. எம்.எல்.ஏக்களை வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர் தனபால், 3 மணி வரை சட்டமன்றத்தை ஒத்திவைத்துள்ளார்.
அவர் இனி என்ன செய்வார் என்ற யூகம்தான் எங்கும் பேச்சாக இருக்கிறது.
யூகம்1: தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக அறிவிப்பார்.
யூகம் 2 : அமளி காரணமாக சபையை நடத்தமுடியவில்லை என்று மீண்டும் அவையை ஒத்திவைப்பார்.
இதில் முதல் யூகத்தை, சபாநாயகர் செயல்படுத்தினால் , தி.மு.க., பன்னீர்செல்வம் அணி, காங்கிரஸ், எம்.எல்.ஏ.க்கள் மொத்தம் 110 பேரும், சபைக்குள்ளேயே உள்ளிருப்புப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.