சென்னை: தமிழ்நாட்டில் மணல் கொள்ளையை தடுக்க  அரச எடுத்த  நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

கனிம வளங்கள் நாட்டின் சொத்து என தெரிவித்த நீதிபதிகள், அதை   கொள்ளையடிக்க அனுமதிக்க முடியாது, உடனே  தடுக்கப்பட வேண்டும்  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்று  வருகிறது.  கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தேர்தல் பிரசாரத்தின்போதே, ஆட்சி பதவி ஏற்ற அடுத்த நொடி முதல் மண்ல் அள்ளலாம் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து, கடந்த 4 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவுக்க மணல் மற்றும் கனிவ வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.   இதன் மூலம் ஈட்டப்படும் பல்லாயிரம் கோடி பணம் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக அமலாக்கத்துறையினல், கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 5 மாவட்டங்களில் உள்ள 28 மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. செயற்கை கோள் உதவியுடன் நடத்தப்பட்ட அந்த சோதனையில், ரூ.4730 கோடி மதிப்புள்ள 22.70 லட்சம் யூனிட் மணல் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தது. ஆனால், தமிழக அரசிடம் இது குறித்து விசாரணை நடத்திய போது, ரூ.36 கோடி அளவுக்க் மட்டுமே மணல் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அரசால் கணக்கு காட்டப்பட்டதை விட 131 மடங்கும், மணல் அள்ள அனுமதிக்கப்பட்ட பரப்பான 190 ஹெக்டேரை விட 5 மடங்கு அதிகமாக 987 ஹெக்டேரிலும் ஆற்று மணல் அள்ளப்பட்டிருப்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்த அமலாக்கத்துறை, அதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் திரட்டி, அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்யும்படி கடந்த ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் எழுதியது.

ஆனால், இதுகுறித்து தமிழ்நாடு அரசு எந்த வொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இந்த விவகாரம் நீதிமன்றத்தின்  விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில்  மணல் கொள்ளை தொடர்பான வழக்கில் கனிமவள ஆணையர் மோகன் நேரில் ஆஜராக சென்னை  உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இந்த வழக்கு  நேற்று (டிச.10) விசாரணைக்கு வந்தபோது, கனிமவள ஆணையர் மோகன் நேரில்ஆஜரானார்.

விசாரணையின்போது, தமிழகத்தில் மணல் கொள்ளையைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? என்று நீதிபதிகள் கனிமவள ஆணையரிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஆணையர், மணல் கொள்ளையில் ஈடுபடுவோருக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டு வருவதாகவும், ஆன்லைன் பதிவு முறை மற்றும் ஜி.பி.எஸ். கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளால் மணல் கொள்ளை பெருமளவு தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆணையரின் பதிலைக் கேட்ட நீதிபதிகள், அபராதம் விதிப்பது மட்டும் போதாது என்று அதிருப்தி தெரிவித்தனர். மேலும், மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதுடன்,   கனிமவளம் என்பது நாட்டின் சொத்து, அவற்றை கொள்ளையடிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மணல் கொள்ளையர்களுடன் இணைந்து செயல்படும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

இதையடுத்து,  மணல் கொள்ளையைத் தடுக்க குறிப்பிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும், அவை போதுமானதாக இல்லை என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் மணல் கொள்ளையைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கனிமவள ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்குத் தள்ளிவைத்தனர்.

[youtube-feed feed=1]