ஸ்ரீநகர்: காஷ்மீரில் தற்போது களத்தில் இருக்கும் சென்னையைச் சேர்ந்த 35 வயதுடைய ஒரு துணை ராணுவப்படை வீரர் தயக்கத்துடன் தொலைக்காட்சியில் சில நிமிடங்கள் தோன்றும் காட்சி வெளியாகியுள்ளது.

அக்காட்சியில், காஷ்மீரில் குடும்பத்தினரிடம் கடந்த பல நாட்களாக பேசமுடியாமல் சிக்கியிருக்கும் நான், இப்போது பேசுவதைப் பார்த்தால் என் குடும்பத்தினர் சற்று நிம்மதியடைவார்கள் என்று கூறியுள்ளார்.

அவரின் வார்த்தைகளில் தடுமாற்றங்கள் தெரிகின்றன. அவர் தொலைக்காட்சிக் குழுவினரை தயக்கத்துடன் அணுகியே அனுமதி கேட்டார். கல்லெறியும் ஆர்ப்பாட்டக்காரர்களை நேருக்கு நேராக சந்திக்கும் இவரைப்போன்ற ஜவான்கள், 20 நாட்களுக்கு ஒருமுறைகூட தங்களின் குடும்பத்தினர்களிடம் இப்போதைய காஷ்மீர் சூழ்நிலையில் பேச முடியவில்லை.

ஏனெனில், தொலைபேசி மற்றும் இண்டர்நெட் சேவைகள் துண்டிக்கப்பட்டிருப்பதே அதற்கான காரணம். “தான் காஷ்மீருக்கு புறப்படும்போது தனது 6 வயது மகளுக்கு கடுமையான காய்ச்சல் இருந்தது. எனக்கு அவளைப் பற்றிய கவலை மிகவும் அதிகமாக இருந்தது. எனது குடும்பத்தினரும் மிகவும் கவலையில் ஆழ்ந்தனர்” என்றுள்ளார் அந்த ஜவான்.