நெட்டிசன்:
வசந்தன் நெல்லை… முகநூல் பதிவு
கிரக இறுக்கம் என்பது கிரகங்களின் காரகத்துவங்கள் சரிவர இயங்காது என்பதாகும்
அதேபோன்று பாவ காரகத்துவங்கள் உள்ளடங்கி நடைபெறும்
1ம் இடம் என்பது தலை என்றால் தலைக்குள் பலவாறான சிந்தனைகள் மூளை குருபகவானை குறியது எவ்வளவு சிந்தனைகள் இந்த 100 நாட்களுக்குள் இயல்பான சிந்தனை மாறுபடுதல்
2ம் இடம் இதை எடுத்துக்கொண்டால் பணம்” பணத்தை எங்கே தேடுவேன்” என்ற பாடலை ஞாபகப்படுத்துகிறது கல்வியை படிக்க கல்விசாலை விடுமுறை ஆசிரியர் வீடுதேடி வீட்டிற்குள் ஊடகக் கல்வி மாறுபாடு உருவாகியது இரண்டாமிடம் முகம் எத்தனை விதமான மாஸ்க் முகத்தை மூடிவிட்டது.
விகாரி வருடம் கடைசியில் முகத்தை விகாரமாகி விட்டது
ஆண்முகத்தை பெண் முகமாக மாற்றி பெண்களுக்கு மீசை வைத்து ஆண் ஆக மாற்றும் பட வித்தைகளும் அரங்கேறியது
3-ஆம் இடம் என்பது தைரியம்
ஒருவகையில் தைரியத்தை நோக்கி போகிறோம் தைரியமும் எதிர்கால பயத்தை உருவாக்கி விட்டது
4ம் இடம் பயணம் – வீடு பூட்டப்பட்டு ஊருக்கு கிளம்பி ஆகிவிட்டது
5ம் இடம் பூர்வீக இடம் பயணம்
6ம் இடம் கொடுக்கலும் இல்லை வாங்கலும் இல்லை வாங்கவும் முடியவில்லை
7ம் இடம் தொழில் பார்ட்னர் லைஃப் பார்ட்னர் வீட்டில் இருக்கிறோம் தொழில் பார்ட்னருடன் தொலைபேசி தொடர்பு
8ம் இடம் ஆயுள் ஆயுள் பயத்துடன் காரிய செய்கைகள் பொதுமக்கள் மீது அக்கறை உள்ள பல தலைவர்கள் கொரணா பயத்தால் அவர்களின் கொள்கை குறட்டை விட்டு தூங்குகிறது
9ம் இடம் பனிரெண்டாம் இடமும் தெய்வீக ஸ்தலங்கள் இறைவனுடைய வழிபாடு நடக்கும் இடங்கள் மூடப்பட்டுள்ளன
ஒன்பதாம் இடம் 12-ஆம் இடம் வெகு தூர பயணம் தரைமார்க்கம் நீர் மார்க்கம் ஆகாய மார்க்கம் பயணம் தடைபட்டு விட்டது
ஒன்பதாம் இடம் 12-ஆம் இடம் தெய்வீக ஸ்தலங்கள் இதுவரைக்கும் நடக்கும் உள்ள வழிபாட்டு ஸ்தலங்கள் தடைபட்டது
10ம் இடம் எப்ப தூங்குகிறோம் எப்ப விழிக்கிறோம் என்று தெரியவில்லை
இரவு பகல் கூட நம் மனம் எண்ணுகிறது
11ம் இடம் லாபம் குறைந்து விட்டது இல்லை சிலருக்கு நின்றுவிட்டது
இயக்கங்கள் நடைபெறுகிறது இரண்டு மூன்று மாதத்திற்கு முன்பே கிரகங்கள் தன் பணியைத் செய்யும் சனிப்பெயர்ச்சி…
ஆறுமாதம் முன்பு குரு பெயர்ச்சி மூன்று மாதம் முன்பு ஆரம்பித்துவிட்டது
ஈசனவன் தலையோட்டில் இரந்துண்ட காலம் பத்தில் குரு வந்தபொழுது ஜென்மத்தில் குரு வந்த காலம் சீதை சிறை பிடிக்கப்பட்டார்
இவ்வாறு கிரகங்கள் இறைவனையும் விட்டு வைப்பதில்லை
அசுவதி நட்சத்திரம்….. பிறந்த சரஸ்வதிக்கு பாக்கியாதிபதி நீச்சமாய் இருப்பதால் தற்பொழுது கல்வி சாலைகள் மூடப்பட்டுள்ளன
பரணி நட்சத்திரம்... பிறந்தவர் துர்காதேவி தைரியத்தில் ராகு ..செவ்வாய் பார்வை யுத்தத்திற்கு தயாராகி விட்டாள்
ரோகிணி நட்சத்திரம்... பிறந்த கிருஷ்ணனுக்கு பாதச்சனி
திருவாதிரை நட்சத்திரம்… பிறந்த சிவன் அஷ்டமச் சனியில் இருக்கிறார்
புனர்பூசம் நட்சத்திரம்...பிறந்த ராமனுக்கு கண்டச்சனி கோவில் தடைபட்டுள்ளது
பூசம் நட்சத்திரம்.. பிறந்த தட்சிணாமூர்த்தி கண்டசனி தனபுழக்கங்கள் குறைவு
சுவாதி நட்சத்திரம்… பிறந்த நரசிம்மர் தோஷம் இல்லை என்பார்கள் நரசிம்மர் ஒருவரே இன்று ஆதரவாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.
மூலம்நட்சத்திரம்… ஆஞ்சநேயர் தனுசு ராசிக்கு இரண்டாம் இடமான முகத்தில் சனிபகவான் அமர்ந்ததால் முகமூடி அணிவித்து விட்டார்
அஸ்தம் நட்சத்திரம்… பிறந்த விநாயகருக்கு ஆறாம் இடத்து அதிபதி ஐந்தாம் இடமான சிந்தனை ஸ்தானத்தில் இருப்பதால் விநாயகரும் அமைதியாக இருக்கிறார்
திருவோணம் நட்சத்திரம்… பிறந்த மஹாவிஷ்ணு ஜென்மச்சனி
சதயம் நட்சத்திரம்… பிறந்த மிருத்துயுஞ்ஜேஸ்வரர் விரயச் சனி நடைபெறுவதால் அவரது செயலிலும் தடை
கிரகங்கள் இறுக்கம் என்பது இது தான் யாரையும் விட்டுவைப்பதில்லை
ஆக… சூரியன் செவ்வாய் சனி சேர்க்கை பார்வைகள் கொரனா
சூரியன் செவ்வாய் சனி சேர்க்கை கோர நரசிம்மர் இது இம்முயூனிட்டி பவர் எதிர்ப்பு சக்தி
சூரியன் சனி சேர்க்கை சரபேஸ்வரர் இது சமுதாய விலகல் செவ்வாய் ஆஞ்சநேயர் இது முககவசம்
ஆக மூவரையும் வணங்குவோம்கொரணாவை விரட்டுவோம்
சூரியன் செவ்வாய் சனி கபசுர குடிநீர்
ஆண்டவனை வணங்குவோம் அரசு சொல்வதை கேட்போம்